மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் குடிமக்களின் கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட வில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.
தில்லியில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை யொட்டி, ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானி, பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, நிகழ்வு முடிந்ததும் பிருத்விராஜ் சாலையில் உள்ள தனது இல்லத்தோட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி, தேசிய மூவர்ணக் கொடியை அத்வானி ஏற்றி மரியாதைசெலுத்தினார். இந்த நிகழ்வில் அத்வானியின் குடும்பத்தினர், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப்ரூடி, பாஜக மூத்த உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லா, அத்வானிக்கு பாதுகாப்பு அளித்துவரும் தேசியப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல்படையினர், பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அத்வானி கூறியதாவது: இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டு விட்டதாக அண்மைக் காலமாக ஒருதகவல் பரவி வருகிறது. அதில் உண்மையில்லை. அந்தக் கருத்தை வெளியிடுவோரை எனக்கு அடையாளம் காட்டினால் அவர்களின்நோக்கம் என்ன என்பதை என்னால் தெரிவிக்க இயலும். குடிமக்களிடையே தேசப்பற்றை வளர்ப்பதே நமக்குள்ள முக்கிய கவலை. அனைத்துத் துறைகளிலும் தேசப் பற்றை வளர்க்க வேண்டும். நாடு தந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கருத்து சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. அதை எதிர்த்து நாங்கள் போராடினோம்.
சுதந்திரம் அடைந்தபிறகு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, கருத்து சுதந்திரத்துக்கு தடை இருந்தது. அதை எதிர்த்து மீண்டும் நாங்கள் போராடினோம். ஆனால், தற்போது அத்தகைய நிலை இல்லை என்றார் அத்வானி.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.