அமித்ஷா விரைவில் தமிழகம் வருகிறார்

அமித்ஷா விரைவில் தமிழகம் வர உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலை பா.ஜ.க. சவாலாக சந்திக்கும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் பா.ஜ.க. பேச்சாளர் களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சிமுகாமை மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப் படுவது தற்போது அதிகரித்துள்ளது. இதுபோன்று சைபர் கிரைம் புகார்களை விசாரிக்க போலீசில் தனிப் பிரிவை உருவாக்க வேண்டும். போலீசாரின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாதநிலைதான் உள்ளது. மக்களின் நம்பிக்கைக் குரியவர்களாக போலீசார் விளங்கவேண்டும். முதலில் குற்றங்களை குறைக்க காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.

பஸ் நிலையம், ரெயில்நிலையம், ஐ.டி. பார்க் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிசிடிவி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். போலீசார் இரவு ரோந்துபணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சிதேர்தலை நாங்கள் சவாலாக எடுத்துக் கொண்டு சந்திப்போம். உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற மாநிலதேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கட்சியின் தேசியதலைவர் அமித்ஷா விரைவில் தமிழகம் வரஉள்ளார். உள்ளாட்சி தேர்தல்தொடர்பாக அவர் எங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க உள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...