உங்களுக்கு என்ன வேண்டும்? நாட்டு நலனா? – கருப்புப் பணமா?

ரூபாய் நோட்டுமீதான மத்திய அரசின் நடவடிக்கையால், முலாயம் சிங்கும், மாயாவதியும் தூக்கமிழந்து தவிக் கின்றனர் என உத்தரப் பிரதேசத்தில் பாஜக  தலைவர் அமித் ஷா பேசினார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. இதை யொட்டி, கன்னாஜில் பாஜக தலைவர் அமித்ஷா, பிரசார  பேரணியை நேற்று தொடங்கிவைத்து பேசியதாவது: மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், ரூ. 500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கள்ளச்சந்தை வியாபாரிகள் பதுக்கிவைத்திருந்த பல லட்சம் கோடி மதிப்புடைய நோட்டுகள் தற்போது வீணாகிவிட்டன.


இதனால் ஒருவகையில் மாயாவதி மற்றும் முலாயம் சிங் ஆகியோரின் முகம் பொலிவிழந்துவிட்டது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இருவரும் நிம்மதி இழந்துள்ளனர்.


இந்தத்தொகுதியின் எம்.பி.யும், முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள்யாதவ், மக்களோடு மக்களாக ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து மக்களின் அனுதாபத்தைப் பெறமுயலுகிறார். மக்களாகிய நீங்கள் ஏடிஎம் மையங்களில் மணிக் கணக்கில் காத்திருப்பதன் கஷ்டம் எனக்குத் தெரியும். ஆனால் நாட்டு நன்மைக்காக இதை நாம் செய்து தான் ஆக வேண்டும்.


உங்களுக்கு என்ன வேண்டும்? நாட்டு நலனா? – கருப்புப் பணமா? என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...