டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வோருக்கு 340 கோடி ரூபாய்க்கு ஊக்கத்தொகை

யர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் மாதம் 8-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இந்தியா முழுவதும் நிலவும் நிழல் பொருளாதாரத்தை ஒழிக்கவும், கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதிகள் கள்ள ரூபாய்நோட்டுகளை புழக்கத்தில் விடுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை  அது .

மேலும் ரொக்கப்பணம் இல்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க எடுக்கப் பட்ட டிஜிட்டல்  முயற்சி. , மோடியின் 'டீமானிட்டைசேஷன்' அறிவிப்பு வெளியாகி ஒருமாதம் முடிந்துள்ளது.

இந்நிலையில், 'நித்தி ஆயோக்' தலைமை செயல்அதிகாரி அமிதாப் காந்த் டெல்லியில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் அதன்படி, டெபிட் மற்றுட் கிரெடிட்அட்டைகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வோருக்கு மொத்தம் 340 கோடி ரூபாய் வரை பரிசுகள்வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது மிகவும் குறைந்த அளவிலான டிஜிட்டல் பணப்பரி வர்த்தனையே நடைபெறுகிறது. இதன் காரணமாக, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த பரிசுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “லக்கிகிரஹக் யோஜனா” எனும் திட்டம், சாதாரண மக்களுக்கானதாவும், “டிஜி தன் வியாபார் யோஜனா” என்ற வியாபாரிகளுக் கானதாகவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த இருதிட்டங்களும், கிறிஸ்துமஸ் பண்டிகையான வரும் 25-ம்தேதி முதல் தொடங்குகிறது. இத்திட்டத்தின்கீழ், வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை பரிசுகள் வழங்கப்படும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஒருமக்கள் இயக்கமாக நடைமுறைப்படுத்துவதே அரசின்நோக்கம் என்றும் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

தினசரி மற்றும் வாராந்திர பரிசுகள்:

“லக்கி கிரஹக் யோஜனா” திட்டத்தின்கீழ், டிசம்பர் 25 முதல் ஏப்ரல் 14 வரை தினமும் 15,000 பேருக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். அதுமட்டுமின்றி வாரம் 7,000 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். அதில் அதிகபட்சதொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

“டிஜி தன் வியாபார் யோஜனா” திட்டத்தின் கீழ், டிசம்பர் 25 முதல் எப்ரல் 14 வரை வாரம் 7,000 வணிகர்களுக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய்வரை பரிசுகள் வழங்கப்படும்.

மெகா பரிசு:

மெகா பரிசானது, நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு ஏப்ரல் 14-ம் தேதி வழங்கப்படும். “லக்கி கிரஹக் யோஜனா” திட்டத்தின்கீழ், நுகர்வோருக்கு முதல்மெகா பரிசாக 1 கோடி ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 லட்சம் ருபாயும் வழங்கப்படும். அதேபோல, “டிஜி தன் வியாபார்யோஜனா” திட்டத்தின் கீழ், வணிகர்களுக்கு முதல் பரிசாக 50 லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 25 லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 5 லட்சம் ருபாயும் வழங்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டிஜிட்டல் பரிவர்த்தனையின் அடையாள எண்ணைக்கொண்டு பரிசு பெறுவோர் தேர்வு செய்யப்படுவார்கள் என அமிதாப் காந்த் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...