உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களுக்கான துறைகளை முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களுக்கான துறைகளை முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார். உள்துறை, நிதி அமைச்சகத்தை  தன்வசம் வைத்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றதைத்தொடர்ந்து முதல்வராக மார்ச் 18-ம் தேதி யோகி ஆதித்ய நாத் பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருப்பினும் அமைச்சர் களுக்கான துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது.

யோகி ஆதித்யநாத் நேற்று டெல்லிசென்று பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து அவருடைய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டதுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அமைச்சர் களுக்கான துறைகளை முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார். உள்துறை, நிதி அமைச்சகத்தை யோகி தன்  வசம் வைத்துக் கொண்டார்.

துணை முதல்வர்கள் கேஷவ்பிரசாத் மவுரியாவுக்கு பொதுப்பணித் துறை, நீர்பாசனத்துறையும், தினேஷ் சர்மாவுக்கு உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொழில்நுட்பம், பிரசாத் மவுரியாவுக்கு கூட்டுறவுத் துறை, சித்தார்த் நாத் சிங்கிற்கு சுகாதாரத்துறை, ரீட்டா பகுகுணாவுக்கு பள்ளிக்கல்வித் துறை, ஸ்வாதி சிங்கிற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...