ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப் படுவதாகவும், இது மே மாதம் 14–ந் தேதிமுதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தமிழ்நாடு பெட்ரோல் விற்பனை யாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கதலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு கூட்டாகபேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

 

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதும் மனதின்குரல் (மான் கீ பாத்) என்ற உரையில் ‘போக்கு வரத்து விதிகளிலும், எரிபொருள் சிக்கனத்திலும் மக்கள் தங்களது பங்களிப்பின் மூலம் புதியஇந்தியாவை உருவாக்கிட முடியும் என்றும், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளினை வாரத்தில் ஒருநாள் உபயோகப்படுத்தாமல், சிக்கன நடவடிக்கை மேற்கொண்டால் மேம்பட்ட இந்தியாவை உருவாக்கிட முடியும்’ என்று கூறி இருந்தார்.

 

பிரதமர் விடுத்த வேண்டுகோளினை ஏற்று பெட்ரோல் விற்பனை யாளர்களான நாங்கள், பொதுமக்கள் பெட்ரோலிய பொருட்களை வாங்குவதை குறைப்பதற்காக, ஒவ்வொருமாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளித்து நாட்டிற்கு எங்களுடைய பங்களிப்பினை செலுத்த இருக்கிறோம்.

அதன்படி, அடுத்தமாதம் (மே) 14–ந்தேதி முதல் அகில இந்திய பெட்ரோலிய விற்பனை யாளர்களின் கூட்டமைப்பின் அழைப்பினை ஏற்று ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் விற்பனை நிலையங்கள் இயங்காது என தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4 ஆயிரத்து 850 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் செயல்படாது. இந்தமுடிவு எங்களுடைய விளிம்புத்தொகை உயர்வு குறித்த போராட்டத்திற்கானது அல்ல.

 

உலகளவில் இந்தியா எரிபொருள்வாங்குவதில் 3–வது இடத்தில் உள்ளது. நமது நாட்டின் 21 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரத்து 500 கோடிக்கான எரி பொருள் வாங்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.56 ஆயிரம்கோடி மதிப்பிலான எரிபொருள் வாங்கப்படுகின்றது. இதில் ஒருநாள் எரிபொருள் சிக்கனத்தை மேற்கொண்டால் ரூ.153 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படும்.

இந்தமுடிவின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான, வளமான புதிய இந்தியாவை ஒளிரச் செய்வதற்கான முயற்சியாக நாங்கள் கருதுகிறோம். இதில் தேசப்பற்றுமிக்க இந்தியனாக நாட்டை வலிமையுடன் கட்டமைக்க உதவிட ஒத்துழைப்பு நல்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

விடுமுறை நாட்களில் அவசரதேவைக்கு யாருக்காவது பெட்ரோல் தேவைப் பட்டால் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ஒருபணியாளர் பணியில் இருப்பார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...