டெல்லியை ஓராண்டுக்குள் குப்பைஅற்ற நகரமாக மாற்றும்பணியில் முனைப்பு காட்டி செயல்படுங்கள்

தேசிய தலைநகர் டெல்லியை ஓராண்டுக்குள் குப்பைஅற்ற நகரமாக மாற்றும்பணியில் முனைப்பு காட்டி செயல்படுங்கள் என புதிய மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மாநில பாஜக தலைவர் மனோஜ்திவாரி அறிவுறுத்தி உள்ளார். கடந்தமாதம் 23ம் தேதி கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர்ந்து பா.ஜ. வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 272 வார்டுகளில், பாஜ 181 வார்டுகளை கைப்பற்றியது. இந்நிலையில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று  மாநகராட்சி உறுப்பினர்களின் கூட்டம் நேற்றுநடைபெற்றது.

இதில் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ்திவாரி பேசியதாவது. தேர்தலுக்கு முன்பாக கட்சியின் சங்கல்ப பத்ராவில் (தேர்தல் வாக்குறுதிகள்) கூறப்பட்ட வைகளை நிறைவேற்றும் மாபெரும்பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

டெல்லி குறித்த பிரதமரின் கனவை நனவாக்கும் கடமையும் உங்களுக்குள்ளது. குறிப்பாக டெல்லியை குப்பைகளற்ற நகரமாக மாற்றவேண்டும். அடுத்த 365 நாட்களுக்கு எப்பகுதியிலும் 24 மணிநேரத்துக்கு மேல் குப்பை குவியக்கூடாது. இரண்டு ஆண்டுகளுக்கும் மாநகராட்சியின் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கூறினார். கவுன்சிலர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் குறித்து  பாஜவின் தேசிய துணைத்தலைவரும், டெல்லி பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜூ எடுத்துரைத்தார். மக்கள் பாஜவின் நம்பிக்கைவைத்து மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர். நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பது நமதுபொறுப்பாகும் என்றார். இந்தகூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, தேசிய செயலாளர் ஆர் பி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...