விஷப்பாம்பு இந்தியா விடம் மண்டியிட்டே ஆக வேண்டும்

சீனஅரசின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான குலோபல் டைம்ஸ் ஒரு் கட்டுரையை பதிவு செய்து ள்ளது.அதில் அமெரிக்காவை விட சீனாவே இந்தி யாவுக்கு எல்லா வகையிலும் பொருத்தமானது. என்று இறங்கி வந்து எழுதியுள்ளது.

 

நேற்று வரை சிக்கிம் பார்டரில் உள்ள சீன பகுதி களில் இருந்து இந்திய ராணுவம் விலகாவிட்டால் போரைத்தவிர வேறு வழியில்லை என்று தொடைதட்டிய சீனா இன்று அமெரிக்காவை விட  சீனாவே இந்தியாவுக்கு எல்லா வகையிலும் பொருத்தமான து என்று இறங்கி வந்திருப்பதை பார்த்தால். மோடி யின் ராஜதந்திர த்திற்கு வெற்றி கிடைத்துள்ளதை உணர்ந்து கொள்ளலாம்.

அதோடு இந்த கட்டுரையில் என்ன சொல்லியி ருக்கிறது என்றால்  வெள்ளை மாளிகையில் மோடி டிரம்ப்பை சந்திக்கும் பொழுது தான் இந்திய  ராணுவம் சிக்கிம் பகுதியில் உள்ள சீனா எல்லை யில் ஊடுருவியது இதன் மூலம் ஆசிய பிராந்தி யத்தில். சீனாவை மிரட்டும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது என்பதை  அமெரிக்காவுக்கு உணர்த்தவே இந்திய ராணுவம் எல்லையை தாண்டியது என்று கூறியுள்ளது.

 

அந்தளவிற்கு விளம்பரம் தேட வேண்டிய நிலையில் இந்திய ராணுவம் இல்லை.ஏனென்றால்  சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோகாலாம் பகுதி இந்தியா சீனா மற்றும் பூடானின் எல்லைப்பகுதியாகும் இந்த எல்லைப்பகுதி யில் ரோடு போட்டு வரும் சீனா பூடான் பகுதி யிலும் ரோடு போட முனைந்துள்ளதால்

அதை தடுத்து நிறுத்தவே இந்திய ராணுவம் சீனா வோடு மல்லுக்கு நிற்கிறது ..சரிப்பா ரோடு தானே போட்டு விட்டு போகட்டும்.அதுவும் நம்ம பகுதியில் இல்லையே பூடான் பகுதி தானே ..இதற்கு ஏன் இத் தனை தீவிரமாக சீனாவை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று கேட்கிறீர்களா..

 

பூடானை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்ட நாள் கனவு அதற்கு முக்கிய காரணம்  சிலி குரி என்கிற மேற்கு வங்காளத்தில் உள்ள இந்தியா வின் கிழக்கு வாசலான சிலிகுரி பகுதியாகும். இந்த பகுதி வெறும் 25 கிலோ மீட்டர் பரப்பு தான்.ஆனால் இந்த பகுதிதான் இந்தியாவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பையும் வட கிழக்கு மாநிலங்களோடு இணைக் கிறது.

 

இந்திய மேப்பை உற்று பார்த்தால் இந்தப்பகுதி கோழியின் கழுத்தை போல இருப்பதால் இதை சிக்கன் நெக் என்று சொல்வார்கள்.அதனால் இந்த கோழி கழுத்தான சிலிகுரி மீது சீனாவுக்கு நீண்ட நாட்களாகவே கண் உள்ளது. இந்த சிலிகுரி பகுதி இப்பொழுது இந்திய சீனா ராணுவம்மல்லுக்கு நிற்கும் டோகாலாம் பகுதியில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திலேயே  உள்ளது.

எனவே இப்பொழுது ரோடு போடுகிறோம் என்று பூடானுக்குள் சீனா நுழைந்தால் அங்கிருந்து சிலி குரியை மட்டும் சீனா காலி செய்து விட்டால் போதும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் இந்திய வரை படத்தில் இருந்தே காணாமல் போய் விடும்.இதற்கு தான் இந்திய ராணுவம் சீனாவுக்கு முட்டுகட்டை கொடுத்து வருகிறது.இதெல்லாம் நடக்குமா

கற்பனை என்றெல்லாம் நினைக்காதீர்கள்..சீனா விஷப்பாம்பு என்பதை திபெத் ஆக்கி ரமிப்பின் மூலம் திபெத்தியர்களும் அதை தொடர்ந்து நடந்த இந்திய ஆக்கிரமிப்பின் மூலம் இந்தியர்களும் உணர்ந்துள்ளார்கள்

 

அந்த விஷப்பாம்பு மீண்டும் இந்தியாவை கடிக்காத படி காப்பாற்ற வேண்டி யது இந்திய அரசின் கடமை அதனால் தான் மோடியும் அமெரிக்கா என்கிற மகுடி எடுத்து ஊத ஆரம்பித்து ள்ளார்.இந்த மகுடியின் சத்தத்திற்கு சீனா என்கிற விஷப்பாம்பு இந்தியா விடம் மண்டியிட்டே ஆக வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...