வங்கதேச எல்லை மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

வங்கதேச எல்லைவழியாக ரோஹிங்கயா அகதிகள் வருவது, கள்ள ரூபாய்நோட்டுகள் கடத்தப்படுவது போன்ற பிரச்னைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள அந்த எல்லைப்பகுதி மாநிலங்களின் முதல் வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


மேற்குவங்கம், அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா, மிúஸாரம் ஆகிய மாநில முதல்வர்கள் பங்கேற்கவிருக்கும் ஒரு நாள் ஆலோசனைக் கூட்டம், மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் வரும் வியாழக் கிழமை (டிச. 7) நடைபெற விருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஐந்து மாநிலங்களும் வங்கதேச எல்லையை யொட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச எல்லைப்பகுதி மாநில முதல்வர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துவது இது நான்காவது முறையாகும். ஏற்கெனவே, பாகிஸ்தான், சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் ராஜ்நாத்சிங் தனித் தனியாக ஆலோசனைகளை நடத்தியுள்ளார். வியாழக் கிழமை நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில், மியான்மரிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.


மேலும், வங்கதேச எல்லை வழியாக கள்ள ரூபாய் நோட்டுகள், போதை மருந்துகள் ஆகியவை இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுவது குறித்தும் ஆராயப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் கடந்த வாரம் மட்டும் 87 ரோஹிங்கயா அகதிகள் பிடிபட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் கே.கே. சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...