ஹிமாச்சல் பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி சாலையோர கடையில் காப்பியை சுவைத்தார். ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்தமாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.
அவரது தலைமையிலான அமைச்சரவை இன்று காலை பதவியேற்றுக் கொண்டது. இந்தவிழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியதலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இது தொடர்பான படங்களை பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சாலையோர கடை ஒன்றில் அவர் காப்பிசுவைக்கும் படமும் போட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி, சிம்லாவின் மால் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்தியன் காஃபி ஹவுஸில் காஃபியை ருசித்தார்.
முன்னதாக, கட்சிரீதியிலான பணிகளுக்காக ஹிமாசல பிரதேசம் வரும் நரேந்திரமோடி, இந்த புகழ்பெற்ற இடத்தில் காஃபி அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அங்கு மீண்டும் தற்போது காஃபியை ருசித்தபடி தனது நினை வலைகளில் ரசித்தார் பிரதமர் மோடி.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.