பூடான் நாட்டிற்கு 4 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி

பூடான் நாட்டின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்குகு 4 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி  வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன் விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில்,  பூடானின் புதியபிரதமரான லோதே ஷெரிங் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார்.  மூன்று நாட்கள் பயணமாக வியாழன் அன்று  தில்லி வந்துசேர்ந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வெள்ளியன்று முறைப்படி பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இருநாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக் கிடையிலான நல்லுறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப் பட்டது.

இந்நிலையில் பூடான் நாட்டின் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்குகு 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி  வழங்கபடும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பேச்சு வார்த்தைக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, பூடானின் 12-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு, இந்தியா சார்பில், 4 ஆயிரத்து 500 கோடி  நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் பூடான் பிரதமர் சந்தித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...