சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தூத்துக்குடியில் தொழிற்சாலை

தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. கூட்டணியை எதிர்க் கட்சிகள் தொடர்ந்து விமர்சிப்பது அவர்களது இயலா மையை காட்டுகிறது. மி‌ஷன்சக்தி சாதனையை மோடி பகிர்ந்துகொண்டதில் தவறில்லை. மி‌ஷன் சக்தி சாதனையிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏழைகளை பற்றி சிந்திக்காதவர். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்குவந்தால் தூத்துக்குடி துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்த்து விடுவார்கள் என்று பீட்டர் அல்போன்ஸ் தவறானவாதத்தை தெரிவித்து வருகிறார். சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நிதி ஒதுக்கப்பட்ட பின்னரே மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 2-ந்தேதி பா.ஜ.க. தேசியதலைவர் அமித் ஷா தூத்துக்குடி வருகிறார். அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார். குற்றப்பரம்பரை என தெரிவித்ததை தவறாக சித்தரிக்கின்றனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்று கின்றார்கள். நான் வெற்றி பெற்றால் தூத்துக்குடியில் பன்னாட்டு விமான நிலையம், புல்லட் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு அளித்து, அவர்கள் தங்களின் விருப்பங்களை ...

இந்தியாவின் முதல் விமான உற்பத் ...

இந்தியாவின் முதல் விமான உற்பத்தி ஆலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வதோதராவில் இந்தியாவின் முதல் விமான ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக உ ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக  உயர்த்தும் லக்பதி தீதிதிட்டம் பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...