பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும் திட்டம், மத்திய அரசுக்கு இல்லை

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும் திட்டம், மத்திய அரசுக்கு இல்லை’ ஆட்டோமொபைல்’ துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் குறித்து, அரசுக்கு கவலை உள்ளது. இது, வேலை வாய்ப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளது. இதை சரி செய்ய, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ‘ஆட்டோமொபைல்’ துறையின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, கார்களுக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்குமாறு, நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைக்கப்படும்.

நம் நாட்டின், ‘ஆட்டோமொபைல்’ துறை, 4.50 லட்சம்கோடி ரூபாய் மதிப்புகொண்டது. இதன் மூலம், பல லட்சம் பேர், வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.

ஆனால், இதில் சிலபிரச்னைகளை அரசு எதிர் கொண்டு வருகிறது. அதில் முதலாவதாக, கச்சா எண்ணெய் இறக்குமதி விலை உயர்வும், அடுத்ததாக, சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பும் இருக்கிறது. இதற்கு, வாகனங்களை மட்டும் குறைசொல்ல முடியாது என்றாலும், சுற்றுச்சூழல் மாசுக்கு, ‘ஆட்டோமொபைல்’ துறையும் பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.

உலகளவில், அதிக காற்றுமாசு உள்ள நகரங்களின் பட்டியலில், டில்லியும் இடம் பிடித்துள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க, 50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. டில்லியின் காற்றுமாசு, தற்போது, 29 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், ஐந்து லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதில், பலியாகிறவர்களில், 65 சதவீதம் பேர், 18ல் இருந்து, 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இதைகுறைக்கும் எண்ணத்தில்தான், போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகை, கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அபராதத்தின் மூலம் பயத்தை உண்டாக்கி, அனைவரையும் விதிகளை பின்பற்றசெய்வதே இதன் நோக்கம். மற்றபடி, மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கம் கிடையாது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், நிதின் கட்கரி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...