உலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார்

காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்த்தை ரத்துசெய்து அதை இந்தியாவுடன் இணைத்தது மட்டுமல்லாமல், இந்திய இறையாண்மையில் மூன்றாம்  நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என கூறியதன் மூலம் உலகில் வலிமைமிக்க தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என இங்கிலாந்து நாட்டின், நாடாளுமன்ற உறுப்பினர் பாரட்டியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தஉரிமையும் இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் சீனா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவை பகிரங்கமாக எதிர்த்துவருகின்றன,  காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருவதகவும்  ஐநா மனித உரிமை மன்றத்தில் பாகிஸ்தான் இந்தியாமீது புகார் அளித்து, அதற்கான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. இந் நிலையில் இங்கிலாந்தில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் சார்பில் தியாகிகள்தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பிளாக்மேன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கையா பாரட்டுகிறேன்.

 

இந்தியா சுதந்திரம் அடைந்த  ஒருசில ஆண்டுகள் முதல்  காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக இருந்து  வருகிறது, அப்படியிருக்கையில் அதில் சிலமாற்றங்களை கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது. அதை விமர்சிக்கவோ. எதிர்க்கவோ, அதில்  தலையிடவோ பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார். ஆக்கிரமிப்பு காஷ்மீர்பகுதியில் இருந்து பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தை உடனே வெளியேற்றுவதுடன், முற்றிலுமாக காஷ்மீரை விட்டு வெளியேறவேண்டும் என்றார். சீனா பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் எதிர்த்தபோதும் தன் முடிவில் உறுதியாக இருந்து இந்திய விவகாரங்களில் யாரும் தலையிடமுடியாது என்று எச்சரித்ததன் மூலம் உலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார் என அவர் பாராட்டினார்.

 

இந்தியாவின் முடிவை தீவிரமான ஆதரிக்கிறேன் என்றும்,  ஐநா மன்றத்தில் இங்கிலாந்து இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன் என்றும் அப்போது அவர் கூறினார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் கூடவே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...