படேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, 370-வது பிரிவைத் திரும்பப்பெற்றது போன்றவற்றில் பாஜகவுக்கு எந்தவித அரசியலும் இல்லை. அரசியல் ரீதியாகவும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி தான் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது.

பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்ட போது, தவறான நேரத்தில் போர் நிறுத்தத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவித்ததால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. ஆனால், அந்தவிவகாரத்தை அப்போது சர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் என்றபகுதியே இருந்திருக்காது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின், ஏறக்குறைய 50 நாட்களில் ஒரு துப்பாக்கி குண்டுகூட எந்த மக்கள் மீதும் பயன்படுத்தப்படவில்லை. இனிவரும் நாட்களில் காஷ்மீரில் எந்த விதமான பதற்றமும் இருக்காது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒருகுடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறைகளே ஆண்டார்கள். ஆனால், ஊழலுக்கு எதிரான அமைப்பு உருவாக்குவதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. ஊழலில் ஈடுபட்டவர்கள்தான் தற்போது, காஷ்மீரில் குளிர் நிலவினாலும், கொதிப்பாக இருக்கிறார்கள்.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்பின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் நான் கேட்கிறேன். 370-வது பிரிவை நீக்கியதற்கு எதிர்க்கிறார்களா அல்லது நீக்கியதை ஆதரிக்கிறார்களா என்பதை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.

அமித் ஷா .

மும்பையில்  ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவை நீக்கியது தொடர்பான நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...