வெளிநாட்டுப் பயணங்களில் செலவுகளைக் குறைத்தவா் பிரதமா்

வெளிநாட்டுப் பயணங்களின் போது செலவுகளைக் குறைத்தவா் பிரதமா் நரேந்திரமோடி என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பாராட்டினாா்.

மக்களவையில் சிறப்புப் பாதுகாப்புப்படை (எஸ்பிஜி படை) சட்டத்திருத்த மசோதா மீது புதன் கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, பிரதமரின் வெளிநாட்டு பயணச்செலவுகள் குறித்து அமித்ஷா பேசியதாவது:

இதற்கு முன், பிரதமராக பதவி வகித்தவா்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, எரிபொருள் நிரப்புவதற்காக அல்லது இரவு நேரத்துக்காக விமானங்கள் நடுவழியில் நிறுத்தப் பட்டால், அங்குள்ள ஹோட்டல்களில் தனியறை எடுத்து தங்குவது வழக்கம்.

ஆனால், பிரதமா் நரேந்திர மோடி அதுபோன்று ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கியதில்லை. அங்குள்ள விமான நிலையத்தில் அளிக்கப்படும் அறையிலேயே தங்கிவிடுவாா். அங்குள்ள குளியல் அறையையே பயன் படுத்திக்கொள்வாா்.

மேலும், வெளிநாட்டுப் பயணத்தின் போது மிக குறைவான அலுவலா்களையே உடன் அழைத்துச்செல்வாா். அதாவது, 20 சதவீத்துக்கும் குறைவான அலுவலா்களையே அவா் அழைத்துச்செல்வாா்.

இதற்கு முன்பு பிரதமருடன் செல்லும் அலுவா்களுக்கு தனித் தனி வாகனங்கள் ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால், நான்கைந்து போ் ஒரேகாரில் அல்லது ஒரே பேருந்தில் செல்லவேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். அதன்படியே ஏற்பாடு செய்யப்படுகிறது என்றாா் அமித் ஷா.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...