உலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
நாடெங்கும் 2,934 மையங்களில் தடுப்பூசிபோட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்நாளில் இந்தியா முழுவதும் 300,000 சுகாதார பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
சீரம் பாரத் பயோடெக் ஆகிய மருந்து நிறுவனங்களிடமிருந்து 160 மில்லியன் மருந்துகளை அரசு வாங்கியுள்ளது. மருந்துகள் விமானம் மூலம் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய 12 தலைநகரங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளன.
தடுப்பூசி போட்டவர்களின் விவரங்கள், தடுப்பூசி வழங்கப்பட்ட இடங்கள் போன்ற அனைத்து தகவல்களை வழங்கும் கோ-வின் (CO-WIN) எனும் செயலியையும் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
முதல் கட்டத்தில் சுகாதார துறையினர், முன்கள பணியாளர்களுடன் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட இணைநோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், உலகில் ஆக அதிகளவில் தடுப்பூசிகளை தயாரிக்கும்நாடுகளில் ஒன்றான இந்தியா, 20 மில்லியன் கொரோனா கிருமிதடுப்பூசி மருந்தை அதன் அண்டை நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீஷெல்ஸ், மொரீசியஸ் ஆகியநாடுகளுக்கு வழங்குவதற்காக சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை வாங்கும் என்று செய்திகள் தெரிவித்தன. உலகளவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 60 விழுக்காட்டை இந்தியா உற்பத்திசெய்கிறது.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |