நகைச்சுவையால் அனைவரையும் கவலைகளை மறந்து சிரிக்கவைத்த நடிகர் விவேக், தற்போது தனது மரணத்தினால், அனைவரையும் அழவைத்து விட்டு சென்று விட்டார்.
விவேக்கின் நகைச்சுவை, சிரிக்க மட்டும்அல்ல, அனைவரையும் சிந்திக்கவைத்தது. அவர் கருத்து கூறுவதோடு நின்று விடாமல், ஒருமுன்னுதாரணமாக திகழும் வகையில் அதனை தனது வாழ்க்கையில் கடை பிடிக்கவும் செய்தார். அவர் நட்ட மரங்கள் அதற்கு சாட்சியாக என்றென்றும் நின்று, அவரது சிறப்பை எடுத்துக்கூறும்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடியும் (PM Narendra Modi), நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல்தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
’பிரபல நடிகர் விவேக்கின் அகாலமரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவையும், அறிவார்ந்த சிந்தனையை தூண்டும் வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. அவர் தனது நிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். ஓம் சாந்தி’ என பிரதமர் நரேந்திரமோடி ட்வீட் செய்துள்ளார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
2willing