ஸாடார்ட் அப் நிறுவனங்களால் தான் அடுத்த 25 ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக தனியாக ஈக்விட்டி நிதியை மத்திய அரசு உருவாக்கும் என்று மத்திய மின்அனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் திறன்மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்
டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஐகான்-2022 எனும் நிகழ்ச்சியை மத்திய திறன்மேம்பாட்டுத்துறை இணைஅமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:
அடுத்த 25 ஆண்டுகளில் தேசத்தின் பொருளாதாரவளர்ச்சி, விரிவாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடு ஆகியவை பெரும்பாலும் நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுனங்களாலும், தொழில்முனைவோர்களாலும் தான் இருக்கும்.
இந்தியப் பொருளதாரம் தற்போது ஆழ்ந்த கட்டமைப் புரீதியான உருமாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது, அதனால்தான் லட்சக்கணக்கான இளம்தொழில்முனைவோர், புதிய நிறுவனங்கள் உருவாகின்றன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது, கடந்தகாலங்களில் இல்லாதவிஷயங்களை இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வழங்கிடும்.ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தப்படி, விரைவில் புதியஈக்விட்டி நிதியத்தை மத்திய அரசு உருவாக்கும்.
இந்த ஈக்விட்டி நிதியத்தில் குறைந்தளவாக 20% பங்களிப்பை மட்டும் மத்திய அரசு வழங்கும், மற்றவைகயில் ஈக்விட்டி நிதியத்தை நிர்வகிப்பது, அனைத்தும் தனியார் நிதி மேலாளர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்படும்.
மத்தியஅரசு உருவாக்கும் இந்த ஈக்விட்டி நிதியத்தில் அரசின் பங்களிளிப்பும், ஆதரவும் இருந்தாலும், நிர்வகிப்பது தனியாராகத்தான் இருக்கும் புதிதாக உருவாக்கும் மருந்துத் துறை, வேளாண் தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிறுவனங்கள் போன்றவற்றுக்கு இந்த நிதியத்தின் மூலம் உதவலாம்.
மத்தியஅரசு ஏற்கெனவே ஸ்டார்ட் அப்இந்தியா சீட் பண்ட் ஸ்கீம்(எஸ்ஐஎஸ்எப்எஸ்) எனும் திட்டத்தை ரூ.945 கோடியில் உருவாக்குவது குறித்து தெரிவித்துள்ளது. இந்ததிட்டத்தில் கர்நாடகா, உத்தரப்பிரதேசம், பிஹார், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் நிதி வழங்கிடமும் முன்வந்துள்ளன
தொழில்முனைவோர்களுக்கு சிறந்தநேரம், ஸ்டார்ட் அப் தொடங்க சிறந்த காலம். கொரோனாவுக்குப்பின், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவித்தல், விரிவாக்குதல், நிதியளித்தல், புதிதாக உருவாக்குதல் போன்றவை நமது பிரதமர்மோடியின் இலக்காக இருக்கிறது. இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |