மதவழிபாடு என்ற பெயரில் மத அடிப்படைவாதம்

கர்நாடகாவில் திருவிழாக் காலங்களில் கோவில்களுக்கு சொந்தமான கடைகளை இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு விட முடியாது என்றும் கோவில்களின் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் கடைஏலத்தில் இஸ்லாமியர்கள் யாரும் பங்கேற்க முடியாது என்றும் சிலகோவில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளதை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டித்துள்ளன. கர்நாடக ஹிந்துசமய அறநிலையதுறை சட்டம் 2002 ன் பிரிவு 12 ன் படி ஹிந்து கோவில்களை சுற்றியுள்ள நிலத்தையோ, கட்டிடங்களையோ ஹிந்துக்கள் அல்லாத வர்களுக்கு வாடைகைக்கு விடக் கூடாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்றியது அன்றைய ‘காங்கிரஸ் அரசு’ என்பது குறிப்பிடத் தக்கது. காங்கிரஸ் கொண்டு வந்தசட்டம் என்பதால் அதை எதிர்க்கவோ அல்லது மாற்றவோ தேவையில்லை.

தங்களுக்கென தனியாக கல்விக் கூடம், தங்களுக்கென தனியாக ஒரு வங்கி, தங்களுக்கென தனியாக ஒருசட்டம் என்று தங்களின் மத நம்பிக்கைகளை ஒட்டிய வாழ்க்கை முறையை பின்பற்றும் உரிமை இஸ்லாமி யர்களுக்கு உள்ளது என்றும் அவர்களின் உரிமை அது என்றும் கூறுபவர்கள், ஹிந்துக்கள் அதே நிலைப் பாட்டை வலியுறுத்தினால், ஐயோ மதச்சார் பின்மைக்கு ஆபத்து என்று துடித்து எழுவது போலி மதச் சார்பின்மை தானே?

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் மசூதி உட்பட தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாகவாழும் இடங்களில் பிள்ளையார் ஊர்வலம் செல்ல தடை ஏன் என்ற கேள்விகேட்க துணிவில்லாத இந்த மதசார்பற்ற நடுநிலையாளர்கள்(?), இன்று இந்த கேள்வியை எழுப்புவது சரியானதா? இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு ஊர்வலம் சென்றால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என்று காவல்துறையினர் அனுமதி மறுப்பதன் காரணம் என்ன என்று இதுநாள் வரை சிந்தித்ததுண்டா?

சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்துவதா என்று பொங்கியெழும் இந்த அறிவுஜீவிகளும், மனித நேய பண்பாளர்களும் (?), காஷ்மீரில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் சிறுபான்மை ஹிந்துக்களை விரட்டியடித்தபோது வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததை மன்னிக்க முடியுமா?

ஜனநாயக நாட்டில் மத அடிப்படையில் குறிப்பிட்ட மதத்தினரை புறக்கணிப்பது நியாயமா? நீதியா என்ற கேள்வி நியாயமானதே. மதரீதியாக எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்பதை அறிவுள்ள யாரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அந்த நிலை ஏன், யாரால்,எப்போது ஏற்படுகிறது என்பதை தெரிந்தும் தெரியாததுபோல் மூடி மறைக்க பார்க்கின்றனர் மதி கெட்ட போலி மதசார்பின்மைவாதிகள்.

பெரும்பான்மையாக இருக்கும் மதத்தினரின் சட்டவிதி முறைகளும், வாழ்க்கை முறையும் தான் அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தபட்டிருந்தால், பின்பற்றப்பட்டிருந்தால் இந்தியா மதசார்பற்ற நாடாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியே? ஆனால், இந்திய கலாச்சாரம், அதாவது ஹிந்துகலாச்சாரம் என்பது சகிப்பு தன்மை மிக்கது என்பதாலேயே ஒருமைபாட்டோடு, ஒற்றுமையோடு இந்தியா உலகின் அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. மதவழிபாட்டு சுதந்திரம் என்பது மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளுக்கு, வழிபாட்டிற்கு, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு, அமைதிக்கு, சமத்துவத்திற்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்ககூடாது.

ஹிஜாப் அணிவதை தவறென்று யாருமே கூறவில்லை. ஆனால், அதை சீருடை சமத்துவம் போற்றும் பள்ளிகூடங்களில் அணிவதை தான் ஏற்க மறுக்கிறது நீதித்துறை என்பதோடு, ஹிஜாப் அணிவது அந்த மதச்சட்டங்களில் அத்தியாவசியம் என்று சொல்லப்படவில்லை என்பதை இஸ்லாமிய பெண் நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு ஆதாரங்களோடு தெளிவாகஅளித்த தீர்ப்பை ஏற்க மறுப்பதோடு, தீர்ப்பளித்த நீதிபதிகளை கொலை செய்வோம் என்று மிரட்டுவதை கண்டிக்ககூட துணிவில்லாத, அருகதையில்லாத அரசியல்வாதிகள், இருக்கிற சட்டத்தை அமல்படுத்துவதை, ஐயோ! சிறுபான்மையினரின் மனம் புண்படுமே என்று துடிப்பது தவறு மட்டுமல்ல, குற்றமும் கூட..

மதவழிபாடு என்ற பெயரில் மத அடிப்படைவாதத்தை கடைபிடிப்பது சமுதாய நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும். ஹிந்து கலாச்சாரத்தில் கூட பல்வேறு குறைபாடுகள் இருந்துவந்துள்ளன. ஆனாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு குறைகள் களையப்பட்டுள்ளன. இது ஒரு தொடர்கதை. இனியும் பல்வேறு சீர்திருத்தங்கள் இடம்பெற்று கொண்டேயிருக்கும். அதேபோன்ற சீர்திருத்தங்கள் அனைத்து மதங்களிலும் அந்தந்த மதத்தினராலும் நடைபெறவேண்டும். அது நடைபெறும் வரை இது போன்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மதம் என்பது நம்பிக்கை. நம்பிக்கை என்பது உணர்வு. உணர்வுஎன்பது உயிரோடு கலந்தது. அனைத்து மதங்களுமே அன்பை போதிக்கின்றன என்றாலும், அளவுக்கதிகமான நம்பிக்கைகளும், கட்டுக்கடங்காத உணர்வுகளும் மனிதர்களுக்கிடையே உணர்ச்சிகளை தூண்டிவிட்டு மோதல்களுக்கு வழிவகுக்கின்றன. மத நல்லிணக்கம் என்பது ஒரு வழிப்பாதை அல்ல. அப்பாதையில் செல்வோர் அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து நீதியின் வழியில் அதாவது சட்டத்தை பின்பற்றி நடப்பதே அனைவருக்கும் நலன் பயக்கும்.

நன்றி நாராயணன் திருப்பதி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ப.ம.க வுக்கே உண்மையான வெற்றி -ராம ...

ப.ம.க வுக்கே உண்மையான வெற்றி -ராமதாஸ்  'முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த ...

பட்டியலின மக்களுக்கு அடிப்படை ...

பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை கிடைக்குமா? என முதல்வருக்கு L. முருகன் கேள்வி பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை கிடைக்குமா? '' என ...

கடந்த 10 ஆண்டுகளில் உதம்பூர் கது ...

கடந்த 10 ஆண்டுகளில் உதம்பூர் கதுவா -தோடா பகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர்,நில ஆக்கிரமிப்பாளர்கள்  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியரை ஒடுக்குவதில் ...

துடிப்பான கிராமங்கள் திட்டத்த ...

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமித் ஷா ஆய்வு புதுதில்லியில் இன்று (13.07.2024) நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், "துடிப்பான ...

மும்பையில் ரூ29,400 கோடி மதிப்பில் ...

மும்பையில் ரூ29,400 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ...

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தி ...

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் கீழ் 90.76 சுய உதவிக்குழுக்களாக ஒருகிணைத்துள்ளது கடைக்கோடி மக்களுக்கும் உள்ளடக்கிய வாழ்வாதாரத்தை வழங்கும் அரசின் உறுதிப்பாட்டை ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...