வங்க தேசத்தவர்களுக்கு மருத்துவ விசா -மோடி அறிவிப்பு

புதுடில்லி : பிரதமர் மோடி வங்கதேசம் வர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார். வங்கதேசத்தவர்களுக்கு மின்னணு முறையில் மருத்துவ விசா மற்றும் அந்நாட்டில் மற்றொரு தூதரக அலுவலகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் டிஜிட்டல் டொமைன், பசுமை ஒத்துழைப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் நீலப்புரட்சி ரயில்வே ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

நரேந்திர மோடி கூறியதாவது: இரு நாடுகள் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகம் நடக்கிறது. வங்கதேசத்தில் இருந்து இந்திய வழியாக நேபாளத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் இரு நாடுகள் இடையே வளர்ந்து வரும் உறவை எடுத்துக் காட்டுகிறது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்காக மின்னணு மருத்துவ விசா வசதி அறிமுகம் செய்யப்படும்.
தூதரக அலுவலகம்
வங்கதேசத்தின் ரங்கப்பூரில் புதிய துணைத் தூதரக அலுவலகம் திறக்கப்படும். இந்தியாவின் பெரிய வளர்ச்சி கூட்டாளியாக வங்கதேசம் உள்ளது. அந்நாட்டுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 1996 கங்கை நதி ஒப்பந்தத்தை புதுப்பித்தல் குறித்து ஆலோசிக்க தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனை நடத்தப்படும். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதும் இந்திய வங்கதேச அணிகளுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்?

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்? நாடு முழுவதும் பலபகுதிகளில் இருக்கும் மோசமான சாலை மற்றும் ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது நியூஸ் 18 இன் 'சப்சே படா தங்கல்' (‘Sabse ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...