ஈ – கவர்னென்ஸ் , எம் – கவர்னென்ஸ்ஷில கலக்கும் குஜராத்

குஜராத் குறித்து, இதுவரை வந்த கட்டுரைகளைப் படித்த பிறகும், 'குஜராத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட மாட்டேன்' என்று அடம் பிடிப்பவர்கள் கூட, ஐ.டி. துறையில் குஜராத் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பார்த்தால் மூக்கில் விரல் வைக்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு வெளிநாடுகளுக்கு இணையாக முன்னேற்றம் கண்டுள்ளது குஜராத்.

டிவைஸ், நெட்வொர்க், அப்ளிகேஷன்ஸ் என்ற அடிப்படையில்

ஐ.டி. துறையில் பல புதுமைகளை நடத்திக் கொண்டிருக்கிறது "குஜராத் அரசு". இதைத்தான் 'டி.என்.ஏ.' என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் தண்ணீர் சப்ளை, டெக்னாலஜி மூலம் ஆட்டோமேட்டிக் சிஸ்டத்தில் இயங்குகிறது. பஞ்சாயத்து அளவில் ப்ராட்பேண்ட் இன்டர்நெட் கனெக்ஷன் தரப்பட்டு, அரசு அலுவல்கள் எளிதாக நடந்து முடிகின்றன. கம்ப்யூட்டரிலேயே ஏராளமான ஃபைல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஃபைல்களை எங்கே வைத்தோம்; கடைசியாக யார் டேபிளுக்குப் போனது என்றெல்லாம் தேடும் வேலை கிடையாது. தொலைந்து போகும் அபாயமுமில்லை. ஆன்லைன் சர்வரில் சேமித்து வைத்தால், தீ விபத்து, பூகம்பம் ஏற்பட்டு கம்ப்யூட்டர் சிதைந்து போனால் கூட, ஃபைல்கள் தொலையாது.

இப்படி அரசாங்கத்தை கம்ப்யூட்டர் மயமாக்கும் (ஈ-கவர்னென்ஸ்) முயற்சி இந்திய அளவிலும் சரி, பல்வேறு மாநிலங்கள் அளவிலும் சரி, நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழகத்திலும் அந்த முயற்சி நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் ஏற்பாடு, தமிழ்நாடு மின்வாரியக் கௌன்டர்களில் கூட்டத்தைக் குறைத்துள்ளது. சில டெண்டர் விண்ணப்பங்கள், தேர்வு முடிவுகள், தேர்வானோர் பட்டியல்… என்று சில விஷயங்கள் ஆன்லைனில் கிடைக்கத் துவங்கியுள்ளன.

எல்லா மாநிலங்களிலுமே, அந்தந்த அரசுத் துறைகளுக்கென்று தனித்தனி வெப்ஸைட்கள் இயங்குகின்றன. ஆனால், ஒரு சில ஸைட்கள் தவிர, மற்ற ஸைட்கள் மக்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையில் இல்லை. பல ஸைட்கள் அப்டுடேட் செய்யப்படுவதே இல்லை. ஆனால், குஜராத்தில் அத்தனை அரசு வெப்ஸைட்களும் தேவையான போதெல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன. பல தகவல்களை, விண்ணப்பப் படிவங்களை, ஆன்லைன் மூலமே பெற்றுக் கொள்ளலாம். பல வேலைகளை ஆன்லைனில் விண்ணப்பித்தே முடித்துக் கொள்ளலாம்.

அவ்வளவு ஏன்? முதல்வர் மோடியிடம் குறை தீர்த்துக் கொள்ள வேண்டுமா? கோரிக்கை வைக்க வேண்டுமா? மோடியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டுமா? மோடியிடம் ஏதேனும் தகவல் கேட்டு வாங்க வேண்டுமா? மோடியை ஒரு விழாவிற்கு அழைக்க வேண்டுமா? காந்திநகர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று காத்துக் கிடக்கத் தேவையில்லை. மோடிக்கென இருக்கும் வெப்ஸைட்டில் நுழைந்து, அவருக்குத் தகவல் அனுப்பி விடலாம். பதிலும் தாமதமில்லாமல் கிடைத்து விடுகிறது.

ரயில், பஸ், விமான டிக்கெட் வாங்குதல், மின் கட்டணம் செலுத்துதல், டெலிஃபோன் கட்டணம் செலுத்துதல், ஆன்லைன் பேங்கிங்… என்று பல விஷயங்கள் இன்டர்நெட் மூலம் அக்ஸெஸ் செய்யும் வகையில் வந்து விட்டதால், நாட்டில் மக்களின் அலைச்சல் ஓரளவு குறைந்துள்ளது. இதனால் கௌன்டர்களில் கூட்டம் குறைவது, போக்குவரத்து நெரிசல் குறைவது என்று பல பயன்பாடுகள் கிடைக்கின்றன. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் பேப்பரின் பயன்பாடு குறைகிறது. சுற்றுச்சூழல் நன்மையும் கூடுதலாக விளைகிறது.

இதை குஜராத் நன்கு உணர்ந்துள்ளது. எனவேதான், பெரும்பாலான அரசு விவகாரங்களை அது ஆன்-லைனில் கொண்டு வந்துள்ளது. கோரிக்கைகள், குறைகள், ஆன்லைன் மூலம் தீர்க்கப்படும்போது, மக்களின் அலைச்சல் பெரிதும் குறைவதோடு, லஞ்சமும் பெரியளவில் தவிர்க்கப்படும். நாமக்கல் மற்றும் மதுரையில் 'தொடுவானம்' என்கிற பெயரில் ஒரு சிஸ்டத்தை சகாயம் ஐ.ஏ.எஸ். அறிமுகப்படுத்தியுள்ளார். யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலமே தங்கள் புகார்களை, கோரிக்கைகளை கலெக்டருக்கு அனுப்பலாம். அதற்கு அந்தந்தத் துறைகளின் மூலம் தீர்வு அளிக்கப்படுகிறது. பஞ்சாயத்து ஆஃபீஸ்களில் இருக்கும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கிராமவாசி, மாவட்டத் தலைநகருக்குக் கிளம்பி வர வேண்டிய கட்டாயம் தவிர்க்கப்படுகிறது.

குஜராத்தில் ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அதையும் தாண்டி ஈ-கவர்னென்ஸைக் காட்டிலும், எம்-கவர்னென்ஸ் இன்னும் லாவகமானது என்பதை உணர்ந்த குஜராத் அரசு, 'மொபைல் கவர்மென்ட்' என்ற திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. கம்ப்யூட்டரை விட, மொபைல் ஃபோன் மக்களுக்கு ஈஸியான விஷயம் என்பதால், மொபைல் மூலம் குறை தீர்ப்பு, கோரிக்கை நிறைவேற்றம் போன்ற விஷயங்களைக் கையாள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நாம் இப்போதுதான் ரேஷன் கார்டை பார் கோட் கொண்டதாக மாற்றவே திட்டமிட்டு வருகிறோம். குஜராத்தில் அது எப்போதோ நடந்து முடிந்து விட்டது.

"குஜராத்தின் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி திடீரென்று ஏற்பட்டு விடவில்லை". 2001 முதல் முதல்வர் மோடி இதற்காக மெனக்கெட்டுள்ளார். 2001-ல் GSWAN என்ற நெட்வொர்க் கொண்டு வரப்பட்டது. ஐ.பி. அடிப்படையிலான நெட்வொர்க் இது. வேறு எங்கும் இந்த வசதி கிடையாது. 37000 அதிகாரிகள், மற்றும் அவர்களின் அலுவலகங்கள் இந்த நெட்வொர்க்கின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான பேண்ட் வித் மூலம் ஏராளமான அப்ளிகேஷன்களுடன் இந்த சிஸ்டம் செயல்படுகிறது. 'ஜன்சேவா கேந்திரா' என்ற திட்டத்தின் மூலம் 226 தாலுகாக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

"அடுத்து 'ஸ்வாகத்' என்ற திட்டம். இத்திட்டம் முதலமைச்சரே நேரடியாக எந்த அதிகாரியுடனும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேச வழி செய்துள்ளது. எந்தப் பஞ்சாயத்தில் வசிக்கும் கிராம மக்களுடனும் முதல்வர் உரை நிகழ்த்துவார். இந்தத் திட்டம் பல அவார்டுகளை வென்றுள்ளது. இப்போது, பல மாநிலங்களில், இது போன்ற திட்டங்கள் வந்து இருக்கலாம் அல்லது வந்து கொண்டு இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் முன்னோடி குஜராத்தான். இதுவரை சுமார் 15 அவார்டுகளை தேசிய அளவிலும் உலக அளவிலும் வாங்கிக் குவித்துள்ளோம்" என்றார் சயின்ஸ் – டெக்னாலஜி துறை செயலாளர் ஆர்.எஸ். சக்ஸேனா, ஐ.ஏ.எஸ்..

ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், ஃபார்மாசூட்டிகல் கம்பெனிகள் என்று பெரிய பெரிய நிறுவனங்களைத் தனது மாநிலத்துக்குள் வளைத்துப் போடுகிறது குஜராத். 202 தொழிற்பேட்டைகள், 60 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று நீள்கிறது அதன் சாதனைப் பட்டியல். அதே வேகத்தை ஐ.டி. கம்பெனிகளைக் கொண்டு வருவதிலும் காட்டுகிறார் மோடி. 1000 பேருக்கு வேலை கொடுத்தால், அல்லது 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டால், அந்த நிறுவனத்திற்கு 'ஸ்பெஷல் இன்சென்டிவ்' தரப்படுகிறது. சொத்துப் பதிவு வரி விலக்கப்படுகிறது. 5 வருடத்திற்கு மின் சுங்கம் ரத்து செய்யப்படுகிறது. முத்திரைக் கட்டணத்தில் 50 சதவிகிதம் விலக்கு தரப்படுகிறது. இவை தவிர, இங்கு வரும் ஐ.டி. கம்பெனிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில், 'ஸைபர் கிரைம் டிடெக்ஷன் செல்' பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இது போன்ற அதீத வளர்ச்சி காண ஐந்து தேவைகள் சொல்லப்படுகின்றன. 1. தொழிலுக்குச் சாதகமான, தொழிலுக்கு உதவக் கூடிய துடிப்பான அரசாங்கம். 2. அங்குள்ள தலைமையின் உறுதியான நிலைப்பாடு. 3. கட்டமைப்பு வசதிகள். 4. தகுதியான பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், அலுவலர்கள். 5. சுற்றுச்சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை – இந்த ஐந்தும் குஜராத்தில் இருக்கின்றன. அதாவது, உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், விளைந்ததுதான் – அங்கு ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும்.

எல்லா மாநில முதல்வர்களுமே நிர்வாகம்தான் செய்கிறார்கள். அவர்களுக்குக் கீழும், அதே ஐ.ஏ.எஸ். முடித்த அதிகாரிகள்தான் பணியாற்றுகின்றனர். அப்புறம் மோடிக்கு மட்டும் இது சாத்தியமானது எப்படி? மோடி போடும் 'ஜீபூம்பா' மந்திரம்தான் என்ன? அடுத்த வாரம் அலசலாம்.

நன்றி; துக்ளக்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...