நம் நாட்டின் மக்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும் அரசியல்வாதிகள்தான் காரணம் என்ற ஒரு கருத்து நிலவிவருகிறது , அரசியல்வாதிகளை பற்றிய மக்களின் தவறானகருத்தை மாற்ற நாம் முயற்சிக்கவேண்டும் என்று பாஜக. மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது;- 1980ம் ஆண்டு பாஜக. தொடங்கப்பட்ட சமயம் , மந்திரி ஒருவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு செல்ல வெளியே வந்தார். வாசலில் நின்றிருந்த அரசு கார் டிரைவரிடம் ‘இன்று ஒருநாள் மட்டும் காரை நானே ஓட்டுகிறேன்’ என்று மந்திரி கூறினார்.
இதற்கு பதில தந்த டிரைவர், ‘அரசாங்கத்தை பயிற்சிபெறாதவர்கள் கூட நடத்தமுடியும். ஆனால், கார் ஓட்டுவதற்கு போதியபயிற்சி வேண்டும்’ என்றார். சராசரி அரசியல் வாதிகளை பற்றி மக்களின் பார்வையும் கருத்தும் இப்படிதான் உள்ளது.
இந்தகருத்தை மாற்றுவதற்கு நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னால் இருக்கும் இந்தபெரிய சவாலில் வென்று, அரசியல்வாதிகளை பற்றிய மக்களின் தவறானகருத்தை மாற்ற நாம் முயற்சிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.