கவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்றி புலம்ப வைத்த பரீந்திரகுமார் கோஷ் 4

கவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்றி புலம்ப வைத்த பரீந்திரகுமார் கோஷ் 4  அலிப்பூர் சதி வழக்கை விசாரித்த நீதிபதி பீச்கிராப்ட் என்பவர் இவ்வழக்கின் பிரதான குற்றவாளியான அரவிந்தகோஷ்-ன் கல்லூரித்தோழர். இருவரும் ஒன்றாகவே ஐ.சி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.எனவே தம் கல்லூரித்தோழரை குற்றவாளியாகப் பார்ப்பதில் அவர் மிகவும் சங்கடப்பட்டார்.

அரசு வழக்கறிஞரான நார்ட்டன் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்த சதிக்கும் அரவிந்தருக்கும் சம்பந்தம் உண்டு என்று நிருபிப்பதிலேயே கவனமாக இருந்தார்,புகழ் பெற்ற "மிட்டாய்க்கடிதம்" என்ற ஆதாரக் கடிதத்தினை அரவிந்தருக்கு எதிரான சாட்சியமாக தாக்கல் செய்து வாதாடினார்.அரவிந்தருக்கு அவரது சகோதரர் பரிந்திரகுமார் கோஷ் எழுதியதாகக் கூறப்பட்ட அந்தக் கடிதம் பின்வருமாறு.

27, டிசம்பர்,1907

அன்புள்ள சகோதரருக்கு ,

இதுதான் தக்கத்தருணம் , தயவு செய்து அவர்களை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு சம்மதிக்கும்படி முயற்சி செய்யுங்கள்.இந்தியா பரவிற்கும் அவசரத்தேவைக்கு ஏற்றபடி நாம் "மிட்டாய்களை" தயாராக வைத்திருக்க வேண்டும். உங்கள் பதிலுக்குகாகத்தான் நான் காத்திருக்கிறேன்.

உங்கள் அன்புள்ள

பரிந்திரகுமார் கோஷ்

இக்கடிதத்தில் மிட்டாய்கள் என்று குறிப்பிட்டிருப்பது வெடிகுண்டுகளைத்தான் என்பது போலிஸ் தரப்பு வாதம். ஆனால் இது பொலிசாரால் சிருஷ்டிக்கப்பட்டக் கடிதம் என்பது சித்தரஞ்சன் தாஸின் ஆணித்தரமான வாதம்,

சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு அரவிந்தரும் பரிந்திரகுமாரும் போயிருந்தார்கள். ராஷ்பிஹாரி போஸ் என்பவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் தீவிரவாதிகளுக்கும் , மிதவாதிகளுக்கும் கடுமையான கருத்து வேறுபாடு நிலவியது. அப்போதுதான் பரிந்திரகுமார் அரவிந்தருக்கு இந்தக் கடிதத்தினை எழுதினர் என்று சாதித்தார் அரசாங்க வழக்கறிஞர்.

அரவிந்தரின் சார்பில் வாதாடிய சித்தரஞ்சன் தாஸ் " ஒரே ஊரிலிருந்து அண்ணனும் தம்பியும், அதிலும் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் இப்படி கடிதம் எழுதிக்கொண்டிருப்பர்களா? உண்மையில் சதி செய்பர்களாக இருந்தால் நேரில்தான் பேசிக்கொள்வார்கள்.அதுதான் இயற்கை.மேலும் வெடிகுண்டுகளைப் பற்றி வெளியூரில் சென்று விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எல்லாவற்றையும்விட பரிந்திரகுமார் கோஷ் , கடிதம் எழுதும் போது தனது முழுப்பெயரையும் கையெழுத்தாகப் போடுவது வழக்கமில்லை ."பரிந்திரன்" என்று சுருக்கமாகவே கையெழுத்துப் போட்டு வருகிறார். எனவே இது ஒரு கற்பனைக்கடிதம் தான்! என்று ஆணித்தரமாக வாதாடினார்.

தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முடிவில் அரவிந்தர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான அரவிந்தர் மஹாகவி பாரதியாரின் முயற்சியால் பாண்டிச்சேரிக்கு வரவழைக்கப்பட்டார். பாண்டிச்சேரியில் தங்கியிருந்த அரவிந்தர் பின்னாளில் மிகப்பெரிய யோகியாகவும் மஹானாகவும் மாறிவிட்டார்.

 

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.