ஆயுதம் செய்யோம் அதில் ஊழலை மட்டும் செய்வொம்

 கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமை (??) காங்கிரசுக் கட்சியில் இரு தலைவர்களுக்கு உண்டு. ஒருவர் மன்மோகன் சிங் இன்னொருவர் ஏ.கே.ஆண்டனி. மன்மோகன் சிங் பிரதமராக ஆனதும் மக்கள் எதிர்பார்ப்பு அதிகமானது. நேர்மையானவர், பொருளாதாரத்தை நிமிர்த்தியவர், அடகுவைத்த தங்கத்தை மீட்டவர்

என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் என்பதால் இவரது நாட்டுக்குப் பல நன்மைகளைச் செய்வார் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். விவரம் அறிந்தோர் சற்றே எச்சரிக்கை காத்தனர். மன்மோகன் சிங் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. சோனியா காந்தி குடும்பம் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள கூட்டம் போடும் வட்டத்துக்குள் வாழவேண்டிய இக்கட்டில் சிக்கியிருக்கிறார் மன்மோகன் சிங் என்றனர்.

ஆனால் 1991ல் செயல்பட்டது போலத் துணிந்து செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு சற்றே இருந்தது. ஆனால் அதுவும் உருண்டோடும் ஆண்டுகளோடு சுருங்கிச் சிறுத்துப் போனது. காமன்வெல்த், அலைக்கற்றை, நிலக்கரி என்று மாபெரும் ஊழல்கள் பல்கிப் பெருகின. மொத்தமும் குப்பை என்ற போதும் தேசப் பாதுகாப்பை இவர்கள் போபர்ஸ் போலச் சீரழிக்கவில்லை என்று சற்றே ஆறுதல் கொண்ட வேளையில் 2012ல் வெடித்தது ஹெலிகாப்டர் பேர ஊழல். காமன்வெல்த் போட்டிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் துவங்கி முக்கியப் புள்ளிகளின் போக்குவரத்துக்கு ஹெலிகாப்டர் வாங்குவது வரை ஊழல் புற்று புரையோடியிருக்கிறது.

 ஏ.கே ஆண்டனியை காங்கிரசு வட்டாரத்தில் புனித அந்தோணி (St. Antony) என்றழைப்பர். காரணம் நேர்மையானவர் ஊழல் கறை படியாதவர் என்பதால். பாஜகவில் அத்வானி அவர்கள் தம் மீதான ஹவால குற்றச்சாட்டு நீங்கும் வரை மக்கள் மத்தியில் ஓட்டுக் கேட்க மாட்டேன் என்று முடிவெடுத்து குற்றம் சுமத்தியது தவறென்று முடிவாகும் வரை தேர்தலில் போட்டி போடாதிருந்தார். அவரை ஸ்ரீலஸ்ரீ அத்வானி சுவாமிகள் என்றெல்லாம் பாஜகவினர் அழைத்ததில்லை என்பது பாஜகவில் நேர்மையாளர்கள் அதிகம் என்பதைக் காட்டுகிறது. நேர்மையாளரைப் புனிதராக்கினால் பாஜகவில் 90% பேர் புனிதர் பட்டத்துடன் வலம் வர வேண்டியது தான். இந்நிலையில் 2012ல் ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என்று செய்தி வந்ததும் வழக்கம் போல அரசு மறுத்தது.

ஏ.கே அந்தோணியார் அப்படி ஊழலே நடக்கவில்லை என்று சொன்னார். ஊழல் இருந்தால் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார். ஆனால் ஓராண்டுக்கு மேல் போன பிறகு இப்போது இத்தலியக் கம்பெனியான ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு இடையே எழுந்துள்ள சில சிக்கல்களால் இந்த விஷயம் வெளிவந்துள்ளது. இந்தக் கம்பெனியின் தலைமை அதிகாரி ஜோசப் ஓர்சி என்பவர் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக இத்தாலிய போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது, எந்த ஆவணத்தையும் தரமுடியாது என்று இத்தாலி போலீசும் நீதிமன்றமும் கூறிய பிறகும் இங்கிருந்து ஒரு குழு இத்தாலி போய் முடிந்தவரை முயற்சி செய்யவிருக்கிறதாம்.

சரி.. நடந்தது என்ன எப்படி என்று பார்ப்போம்.

நம் நாட்டில் இராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவது என்பது பல சிக்கலான விஷயங்களை உள்ளடக்கியது. இடைத்தரகர் கூடாது. லஞ்சம் தரக்கூடாது, லாபி செய்தல் எனப்படும் காக்காய் பிடிக்கும் வேலை ஆகாது என்று பல கட்டுப்பாடுகள். ஆனால் இவை எல்லாம் நடக்கின்றன. போப்ஃபர்ஸ் ஊழலில் இப்படித்தான் நடந்தது. 80 கோடி ரூபாய்கள் வரை கைமாறியதாகச் சொல்லப்பட்டது. 2004ல் மன்மோகன் சிங் அரசு விசாரணையை ஊற்றி மூடியது. இப்போது வெளிவந்துள்ள ஊழலுக்குப் பிள்ளையார் சுழி 2004க்குப் பிறகு தான் போடப்பட்டது.

Ø 2000ல் அப்போதைய இராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அடிக்கடி சியாச்சின் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்,  கார்கில் போருக்குப் பிறகு அங்கே இருக்கும் படைவீரர்களுக்கு ஊக்கம் தரும் செயலாக இது அமைந்தது. ஆகவே முக்கியப் புள்ளிகளின் போக்குவரத்துக்கு சிறப்பு ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என்று பாஜக ஆட்சியில் விமானப்படையின் தலைவர் அனில் டிப்னிஸ் வைத்த கோரிக்கையை ஏற்று முடிவு செய்யப்பட்டது. ஃபிரான்ஸ் நாட்டின் யூரோ காப்டர் என்ற ஒரே நிறுவனம் தான் 18000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர் தயாரித்து வந்தது.

Ø 2003ல் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப்ரஜேஷ் மிஷ்ரா ஒரே நிறுவனம் இருப்பதால் உயரத்தை 15000 அடி என்று குறைத்து ஒன்ருக்கு மேற்பட்ட நிறுவனங்களிடம் விலை கேட்டு நல்லதை வாங்கலாம் என்று முடிவெடுத்தார். அப்போதைய விமானப்படைத் தளபதி கிருஷ்ணசாமி இதை ஒப்புக் கொண்டார். முக்கியப் புள்ளிகளுக்குப் பாதுகாப்புத்தரும் சிறப்புக் காவல் படைக்குழு (SPG) ஹெலிகாப்டர் தேர்ந்தெடுக்கும் பணியில் கலந்தாலோசிக்கப்படவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

Ø 2006ல் முன்மொழிதலுக்கான விண்ணப்பம் (Request for Proposal) சமர்பிக்கச் சொல்லி நிறுவனங்கள் அணுகப்பட்டன. விமானப்படையின் அப்போதைய தளபதி சசீந்திர பால் தியாகி.

Ø 2008ல் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் AW-101 என்ற ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் உயரமும் அகலமும் மிக்கவை. மூன்று இஞ்சின்கள் கொண்டவை. பாதுகாப்பு மிக்கவை என்று SPGயும் விமானப் படையும் சான்றளித்தன. அப்போதைய விமானப்படைத் தளபதி ஹோமி மேஜர். ஆனால் முன்னாள் தளபதி தியாகி பல்வேறு பேச்சுவார்த்தைகளில் சில தரகர்களின் சார்பாக தனிப்பட்ட முறையில் பரிந்து பேசினார். விலைபேரம் இப்போது தான் நடந்தது. இவரது உறவினர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் சில கோடிகள் சம்பாதித்தனர்.

Ø 2010ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலியக் கம்பெனியான ஃபின்மெக்கானிக்காவின் துணைக் கம்பெனியான பிரிட்டனைச் சேர்த்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு ஹெலிகாப்டர் 300 கோடி ரூபாய் விலையில் 12 ஹெலிகாப்டர்கள் 3600 கோடி ரூபாய்களுக்கு வாங்கப்பட்டன.

Ø 2012ல் 3 ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்தன. அவற்றோடு ஊழலின் வாலும் பிடிபட்டது.

தற்போது ஊழல் வெளியானதும் வேறு வழியில்லை என்ற நிலையில் ஒரு குழுவை இத்தலிக்கு அனுப்புகிறேன் என்கிறார்கள். இதில் ஊழல் நடந்தது பாதுகாப்பு மந்திரிக்குத் தெரியாதிருக்க முடியாது. பாதுகாப்பு மந்திரிக்கு இது தெரியாது என்றால் இராணுவ உளவுத்துறை கோட்டை விட்டதா அல்லது மந்திர்யிடம் ஊழலை மறைத்ததா என்ற கேள்வி எழுகிறது. இரண்டில் முன்னது திறமைக்குறைவு. அதனால் தேசப் பாதுகாப்புக்குச் சிக்கல். பின்னது புரையோடிய ஊழல். மிகவும் அபாயகரமான நிலை. ஆனாலும் சமாளிக்கப் பார்த்திருக்கிறார்கள்.

நேர்மையாளார் அந்தோணி தான் நேர்மையாளன் ஆனால் பிறர் திருடினால் கண்டுகொள்ளமாட்டேன் என்று தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே என்ற கொள்கையுடைய காந்தியாரின் குரங்குகள் போல இருந்துவிட்டாரா தெரியவில்லை. இத்தாலி நீதிமன்றம் ஒத்துழைக்க மறுத்துவிட்டது. ஆனாலும் அந்த ஊர் வக்கீல் ஒருவரை வைத்து வாதாடிப் பார்த்துவிடுவோம் என்கிறது ஸிபிஐ. இவர்கள் வைக்கும் வக்கீல் முக்கியக் குடும்பத்துக்கு வேண்டியவராக இருந்தால் மேன்மேலும் சிக்கல்தான்.

இடைத்தரகர்களுடன் குலாவிவந்த முன்னள் தளபதி தியாகி இப்போது தான் ஒரு பாவமும் அறியாதவர் என்கிறார், ஆனால் அவர் 6-7 முறைகள் இடைத்தரகர்களுடன் பேசியதற்கு ஆதாரம் உள்ளது. இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. முன்னாள் தளபதி தியாகி தான் குற்றவாளி என்று வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள். அதன் மூலம் பேரம் பேசிய அதிகாரிகள்,  அரசியல்வாதிகள் ஆகியோரைத் தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறது என்கிறார் முன்னாள் விமானப்படைத் தளபதி கிருஷ்ணசாமி. இதைச் செய்தால் இன்னொரு பெரும் சிக்கல். நாட்டில் இன்னும் பெருமளவில் ஊழல் கறைபடியாத அமைப்பினர் இராணுவ வீரர்கள். உங்கள் தளாபதி ஊழல்வாதி என்று சொல்லி அவர்களை மட்டம் தட்டுவதில் யாருக்கு லாபம். ஊழலுக்குத் துணை போன அதிகாரிகளைத் தண்டிப்பது வேறு.

தான் கையிலெடுத்துப் போராடும் ஆயுதம் தரமானது என்ற நம்பிக்கை ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் மிக முக்கியம். அது இல்லையென்றாலோ தன் தளபதி காசு வாங்கிக் கொண்டு தனக்கு துரோகம் செய்கிறார் என்று இராணுவ வீரர்கள் எண்ணினாலோ தேசப் பாதுகாப்புக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேறெதுவும் இல்லை. ஊக்கம் மட்டுப்பட்ட இராணுவவீரன் கடமைக்காக உயிர் விடுவான், ஆனால் துணிவுடன் எதிரியைப் பந்தாடும் தீரமிருக்காது அவனிடம். போஃபர்ஸ் தொடங்கி இராணுவம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ஊழலும் இத்தாலியர்கள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.

காங்கிரசுக் கட்சியின் முதல் குடும்பத்தினருக்கு இதில் இருக்கும் சம்பந்தங்களை எப்படி எங்கே ஆதாரத்துடன் பிடிக்கலாம் என்று திரு. சுப்பிரமணியசுவாமி அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால் அந்தோணியார் அமைச்சகம் அதைச் செய்யாது விட்டுவிட ஆயிரம் வழிகளை நாடும் என்பதில் எள்ளளவும் ஐயத்துக்கு இடமில்லை.

நான் கவிதை என்று எழுதிய ஒரிரு வரிகள் நினைவுக்கு வருகின்றன.

இங்கிலாந்து வழியாக இடதுகால் வைத்தசனி

இத்'தாலி' போயும் படுத்தும்.

நன்றி ; அருண் பிரபு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...