கற்ப்பக விருச்சம் தான் நம் இயக்கம்

கற்ப்பக விருச்சம் தான் நம் இயக்கம் ஒரு மன்னன் ,அண்டை நாட்டு மன்னன் தன்மீது போர் தொடுத்ததில் தோற்றுப் போனான் .நிராதரவாக காட்டுக்குள் விரட்டப்பட்டான் .காயமுற்ற உடலுடன் ,கிழிந்த ஆடைகள் ,கலைந்த உடல் , பசித்த வயிற்றுடன் காட்டுக்குள் நடந்தான் .

அங்கெ ஒரு பெரிய நிழல் தரும் மரம் .மரத்தின் பக்கத்தில் அங்கும் இங்குமாக சிலர் தவமியற்றிக் கொண்டிருந்தனர். அவர்களது ஒட்டிய வயிறும் ,வெறும் கோவண உடையும் மன்னனுக்கு இவர்களிடமா பிச்சை கேட்பது என்ற ஒரு தயக்கத்தை ஏற்ப்படுத்தியது . பிறகு ஒரு வழியாக பசி தாங்க முடியாத அவன் " எனக்கு உதவி செய்ய முடியுமா? " எனக் கேட்டான் . துரவியரில் ஒருவர் "இதோ இந்த மரத்திடம் போய் உனக்கு என்ன வேண்டுமோ கேள் !" என்றார் .

மன்னன் மரத்தின் அருகே போய் நின்று எனக்கு பசிக்கு உணவு வேண்டும் என்று வேண்டினான் . எங்கிருந்தோ தட்டில் கனி வகைகளும் , உணவும் வந்தன . வியப்பு மேலிட்ட மன்னன் வயிறார உணவருந்தினான் . உண்ட களைப்பு , தரையில் படுத்து பழக்கமில்லை. மீண்டும் துரவியர்களை பார்த்தான். இவனது பார்வையின் பொருள் புரிந்த அவர்கள் .

"என்ன வேண்டுமானாலும் கேள் " என்றனர். "உறங்க கட்டிலும் படுக்கையும் வேண்டும் என்று மரத்திடம் வேண்டினான் . மெத்தையுடன் கட்டில் வந்து சேர்ந்தது .நன்றாக உறங்கினான் .விழித்த பிறகு காயங்களில் வலி ." காயங்கள் போகவேண்டும் " போயிற்று . ஒரு நப்பாசை -ஆனாலும் கேட்டு விட்டான் ."ஏ அதிசய மரமே ! என் நாட்டை எனக்கு மீட்டுத்தா "சிறிது நேரத்தில் அந்த வனாந்தரத்தில் ஒரு பரபரப்பு .இவனை வெற்றி கொண்டிருந்த மன்னன் ,வீரர்களுடன் இவனைத் தேடி வந்து கொண்டிருந்ததான் ."நான் உன்னை வென்றது உண்மை. ஆனால் உன்னை காட்டுக்கு அனுப்பிருக்க கூடாது . நீ நல்லவன் என உனது மக்கள் புகழ்கிறார்கள் . நியே உனது நாட்டை எடுத்துக் கொள் "என திரும்ப அழைத்துக் கொண்டான் .

மன்னனது வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடர்ந்தது . ஆனால் ஓரிரு நாட்களில் அவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது ."அது சரி ! கேட்பதை எல்லாம் தரும் மரத்தை அருகில் வைத்துக் கொண்டு இந்த துறவிகள் மட்டும் ஒட்டிய வயிறுடன் உள்ளார்கள். கோவணம் மட்டுமே அணிகிறார்கள் . தரையில் படுத்து உறங்குகிறார்கள் .இது ஏன் ? "

மறுநாள் காட்டுக்குச் சென்றான் துறவிகளை சந்தித்தான் வணங்கினான் .வினாவினான் . தலைமைத் துறவி சொன்னார் …..

"இது கற்பக விருட்சம் . இது கேட்பவர்களுக்கு கேட்டதைத் தரும். ஆனால் இந்த மரத்துக்கு சக்தி எங்களை போன்று சுயநலமில்லாமல் தவம் செய்பவர்களால் கிடைக்கிறது . இந்த சக்தியின் பலனை நாங்களும் அனுபவிக்க முனைந்தால் மரத்தின் சக்தி மங்கிவிடும் " என்றார் .

ஆர் .எஸ் .எஸ் பரிவார் இயக்கங்கள் என்றொரு வார்த்தை சரியோ ,தவறோ ? அரசியல் துறையில் இருந்தாலும் ஆர்.எஸ் .எஸ் . குடும்பத்தைச் சார்ந்தவர் என்ன பொருள் .

"இந்த தேசத்தின் அடிப்படை பண்பாட்டை பாதுகாத்து பாரதத்தை உலகரங்கில் உயர்த்த வேண்டும் "என்கின்ற கொள்கையில் உடன்பாடு .

"சங்கத்துகென்றே உருவாக்கியுள்ள ஒரு வேலை முறையின் சிறப்புத் தன்மை.அந்தப் பணியை செய்யும் தொண்டனுக்கு தேவையான குணங்கள் இதுவும் ஒன்றுப்பட்டு இருக்கவேண்டும்.கற்பக விருட்சம் என்பது நமது அமைப்பு . அது எதையும் செய்ய வல்லது . அந்த சக்தி இந்த இயக்கத்துக்கு எப்படி வந்தது ?

லக்ஷக்கனக்கனோர் தன்னை வருத்திக் கொண்டு வளர்த்த இயக்கம் நம் இயக்கம் .நம் தலைவர்களின் ஒருவர் சிறையில் மரணம், ஒருவர் ஜெயிலில் மரணம். இந்தகைய தியாகத்தால் வளர்க்கப்பட்ட கற்ப்பக விருச்சம் தான் நம் இயக்கம் . இந்த சக்தி நாம் பயன்படுத்தி சுகம் காண அல்ல . இந்த சக்தி மக்களுக்கு பயன்படவே. மாறாக தியாகம் செய்து அமைப்புக்கு சக்தி வளர்க்க பாடுபடுபவர்களே , அனுபவிக்கத் தொடங்கி விட்டால் மரத்தின் அதாவது இயக்கத்தின் சக்தி குறைந்து விடும் .

நன்றி இல.கணேசன் ஜி

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர்

– இல . கணேசன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...