கோவை அடுக்கு மாடி தீவிபத்து திட்டக்குழும அதிகாரிகள் தண்டீக்கப்பட வேண்டும்

 கோவை அடுக்கு மாடி தீவிபத்து திட்டக்குழும அதிகாரிகள்  தண்டீக்கப்பட வேண்டும் கோவை அடுக்கு மாடி தீவிபத்து—அனுமதி அளித்த கோவை மாநகராட்சி—உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள்—உடனடியாக தண்டீக்கப்படவேண்டும்—பாஜக.கோரிக்கை

கோவை அவினாசி ரோடு லெட்சுமி மில் சந்திப்பு அருகே அடுக்குமாடி கட்டிடம் நேற்று தீக்கிரையானதும், அதில நால்வர் மரணமடைந்ததும் வருத்தததிற்குரியது..இற்ந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமைடைய..வாழ்த்துக்களையும் பாஜக தெரிவித்துக்கொள்கிறது.

தீவிபத்துக்கு காரணம் மின்கசிவு என்று சொல்லப்பட்டாலும், “அவசர வழி ” இல்லை—போதிய பாதுகாப்பு வசதிகள் கட்டடத்தில் இல்லை—கட்டிடத்தின் இரண்டு மாடிகள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது—எனபன அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது..

கோவை மாநகராட்சி ஏற்கன்வே அனுமதி மீறிய கட்டிடங்களை இடிக்க சென்னை உய்ர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று..சில பெரும்புள்ளிகளின் கட்டிடத்தைக்கூட இடித்ததும், அதற்காக “இடிக்கும் குழு ” ஒன்று உருவாக்கப்பட்டதும், முந்தைய மாநகராட்சி ஆணையர் திரு அன்சுல் மிஸ்ரா காலத்தில் நடைபெற்றது..

உய்ர்நீதி மன்ற உத்தரவு இன்னும் தொடரும் போது ஏன் அனுமதி மீறிய—சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பது நிறுத்திவைக்கப்பட்டது என்று தெரியவில்லை..

நேற்றைய தீவிபத்து கட்டிடத்திற்கு அனுமதி வழங்கிய மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வ விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று தமிழக அரசை பாஜக கோருகிறது..

ஏற்கனவே இடிக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விதிமுறை மீறிய கட்டடங்கள் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என மாநகராட்சியை பாஜக கோருகிறது..

பொது கட்டடங்கள்—அடுக்கு மாடி குடியிருப்புக்கள்—கல்யாண மண்டபங்கள்—ஓட்டல்கள்..சினிமா மற்றும் ஷாப்பிங்மால்கள்…இவைகளை உடனடியாக மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தயவு தாட்சண்யமிண்றி…நடவடிகை எடுக்க வேண்டும் என்று பாஜக கொருகிறது..

விதிமுறை மீறல் கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளை “குண்டர் ” சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று பாஜக கோருகிறது.

எஸ்.ஆர்.சேகர் எம்.ஏ.பி.எல்.
மாநில பொருளாளர் பா.ஜ.க.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...