வில்வம் சிவமூலிகைகளின் சிகரம்

   வில்வம்  சிவமூலிகைகளின் சிகரம் சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு . லிங்கம் தொடர்பானதில் பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும் . இந்த வில்வ தழைகள் கிடைப்பதற்காக அனேகமாக ,சிவன் கோவில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப் படும் .வில்வம் குளிர்ச்சியூட்டும்

குணமுடையது அதாவது இதை உண்டால் உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும் .சிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்குமிக உகந்ததாகும்.இதனை "சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர் .

இந்த இலைகளை கொண்டு ஈசனை பூஜிப்பதால் சகல பாவங்களும் நீங்கும் இந்த வில்வ மரத்தினை வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் .ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும் .புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும் .காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும் .

வில்வ மரத்தில் அபார மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.வில்வ காயை பறித்து பார்த்தால் ,உருண்டையாகவும் ஓடு கடினமாகவும் வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டது .இதன் பழமானது குடற் கோளாறுகளை நீக்கவும்,மலக்கட்டை நீக்கி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.

வில்வ இலை கசாயம் பருக கைகால் பிடிப்பு, உடல் வலி முதலியவை குறையும் மேலும் இந்த கசாயமானது கபம், மூச்சுத் திணறல் , பித்தம் போன்றவையை குணமாக்கும் .அது போல இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள உடல் பகுதியில் ஊற்றினால் அவை குறைந்து விடும் .,  இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது,  ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்புகுணப்படுத்தப்படும்.

வில்வ வேர் கஷாயம் பருக அது நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வை போக்கி சாந்தமடையும் செய்யும் தன்மை கொண்டதாகும்

ப்ரோட்டின், கொழுப்பு. கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்பு, உலோகச்சத்து , மாசத்து , கலோரி போன்றவை ஆப்பிள் , மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட வில்வ பழத்தில் அதிகமாக உள்ளது என்பது வியக்க தக்கதே.

ஆரோக்கியத்திற்கு அரணாகவும் ,ஆன்மீகத்தில் முக்கிய இடம் பெற்றும் இருப்பதுமான வில்வமரத்தை புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...