பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய டாக்டர் முகர்ஜீயின் அமரத்வம்

 பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய  டாக்டர் முகர்ஜீயின் அமரத்வம் அறுபது வருடங்களுக்கு முன் ஜூன் 23- 1953-ம் வருடம் தான் , டாக்டர் ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி அவர்கள் மறைந்து விட்டார்கள் என்ற துக்க சேதி ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றைய தினம் அதிகாலையில் சுமார் 2:30 மணியளவில், ஜெய்ப்பூரிலில் உள்ள ஜன சங்கக் காரியாலயத்தின் வெளியே யாரோ உரத்த குரலில் " அத்வானி ஜீ , நம்ம டாக்டர் முகர்ஜீயைக் கொன்னுட்..டா…ங்க" ன்னு ஒப்பாரி வைக்கும் ஒலி கேட்டு நான் தூக்கத்திலிருந்து அதிர்ந்து எழுந்தேன். அவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். தனக்குச் செய்தி கிடைத்தவுடன் , அதிர்ச்சியைத் தாளாமல் என்னுடன் அதைப் பகிர்ந்து கொள்ள எங்களது அலுவலகத்துக்கு விரைந்து வந்திருக்கிறார்.

அது லக்ஷக் கணக்கானோருக்கும் அதிர்ச்சியான செய்திதான். அவ்வருட ஆரம்பத்தில்தான் , அவரால் தோற்றுவிக்கப்பட்ட "பாரதிய ஜன சங் " என்ற புதிய கட்சியின் முதலாவது அகில இந்திய மாநாடு கான்பூரில் நடைபெற்றது. ராஜஸ்தானத்திலிருந்து சென்ற பங்கேற்பாளர்களில் நானும் ஒருவன் என்ற பெருமை பெற்றேன். பூல் பாக் என்ற இடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்தான் , கூடியிருந்த ஆயிரக்கணக்கான ,சங்கப் பிரதிநிதிகளுக்கு , டாக்டர் முகர்ஜி " நமது நாடு ஒன்று; இங்கு, இரண்டு ஜனாதிபதிகள், இரண்டு கொடிகள் மற்றும் இரண்டு அரசியல் நிர்ணய சட்டங்கள் இருக்கக் கூடாது " என்ற வீர முழக்கத்தை முன் வைத்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற நாடு தழுவிய போராட்டத்தின் தீர்மானத்தை , பாரதிய ஜன் சங் முதன் முதலில் கான்பூரில்தான் இயற்றியது. ஷேக் அப்துல்லா விதித்திருந்த தடை உத்தரவை மீறி தானே முன்னிருந்து போராட்டத்தை நடத்துவது என்று .டாக்டர் முகர்ஜீ முடிவு செய்தார். இந்த இயக்கத்திற்க்காக நாடு முழுமைக்கும் சென்று ஆதரவு திரட்டுவது என்றும் டாக்டர் முகர்ஜீ முடிவெடுத்தார். அந்த சுற்றுப்பயணத்திற்கு முந்தைய கூட்டங்களுக்கு தன்னுடன் வரும்படி ஸ்ரீ அடல் பிஹாரி வாஜபேயீ அவர்களை அவர் அழைத்தார்.

அந்நாளில் நான் ராஜஸ்தானில் இருக்கும் கோட்டா என்னுமிடத்தில் இருந்தேன். டாக்டர் முகர்ஜீயும் ஸ்ரீ அடலும் அவ்வழியாகப் போகப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டது, நான் அவர்களை கோட்டா ரயில் நிலையத்திற்குச் சென்று சந்தித்தேன். அதுதான் கட்சியின் நிறுவனரான ஸ்ரீ டாக்டர் ஷ்யாம ப்ரசாத் முகர்ஜீ அவர்களைக் கடைசியாக நான் சந்திப்பது என்பதைக் கனவிலும் நான் நினைத்திருக்க முடியாது.

மே திங்கள் 8 , 1953 அன்று டாக்டர் முகர்ஜீ ஜம்மு போவதற்காக தில்லியிலிருந்து கிளம்பி பஞ்சாப் வந்தார். அமிர்தசர்சில் 20, 000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமிர்தசரஸ் , பதான்கோட் மாதோபூர் வழியாகச் சென்ற அவரது பயணம் ஏதோ ஒரு வெற்றி ஊர்வலம் போன்றே இருந்தது. , பதான்கோட் ராணுவ கன்டோன்மென்ட் பகுதியிலிருந்து சுமார் 12 கி மீ தூரத்தில் இருக்கும் சிற்றூர் மாதோபூர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து பஞ்சாபைப் பிரிக்கும் ராவி என்னும் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது மாதோபூர். ஜம்மு காஷ்மீரத்தில் நுழைய , டாக்டர் ஸ்ரீ அடல்ஜீயுடன் ஒரு ஜீப்பில் ஏறி ராவி நதியின் மீதான பாலத்தைக் கடக்க முற்பட்டார். நடுப் பாலத்தில் , ஒரு ஜம்மு காஷ்மீர் போலீஸ் படை ஜீப்பை வழி மறித்து, டாக்டர் முகர்ஜியிடம் நுழைய அநுமதி இருக்கிறதா என்று கேட்டது. இல்லை என்று பதிலிறுத்த டாக்டர் முகர்ஜீ, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரகாரம் எந்த இந்தியக் குடிமகனும் இந்தியாவின் எந்த பகுதிக்கும் தடையின்றிச் செல்லலாம் என்று கூறினார். போலீஸ் அவரைக் கைது செய்தபோது அவர் ஸ்ரீ வாஜபேயீயிடம் , " நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; சென்று மக்களிடம் , நான் ஜம்மு காஷ்மீரில் ஒரு கைதியாக அநுமதியின்றி நுழைந்திருக்கிறேன் " என்ற விஷயத்தைப் பரப்புங்கள் என்று சொன்னார்.

பதான்கோட்டில், பஞ்சாபின் மூத்த காவல் துறை அதிகாரிகள் டாக்டர் முகர்ஜீயிடம் , அவரிடம் அநுமதி இல்லாவிட்டாலும் , மாதோபூரைக் கடந்து பாலத்தின் மீது செல்லலாம் என்று பஞ்சாப் அரசு அவர்களுக்குக் கட்டளை இட்டிருப்பதாகக் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகவே, பஞ்சாபிலல்லாமல் டாக்டர் முகர்ஜீயை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசுக் கைதியாக வைக்க வேண்டும் என்று ,ஜம்மு காஷ்மீர் அரசும் மத்திய அரசும் சேர்ந்து நடத்திய நடவடிக்கை என்பது உறுதியாயிற்று.

இந்த திட்ட்மிட்ட கூட்டுச் சதியான நடவடிக்கையின் விளைவு நாட்டையே உலுக்கக்கூடிய பேரிழப்பு ஏற்பட்டதுதான். ஸ்ரீநகரில் ஒர் சிறு வீட்டில் சிறை வைக்கப்படிந்ருந்த டாக்டர் முகர்ஜீ திடீரென்று நோய்வாய்ப்பட்டு, குறுகிய காலத்தில் ஜூன் 23 , 1953 அன்று உயிர் நீத்தார் என்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சேதி கேட்டதும், பிரதமரின் அலுவலகத்திற்கு , மேற்கு வங்க காங்கிரஸ் முதல்வர் டாக்டர் பிதான் சந்திர ராய், டாக்டர் முகர்ஜீயின் தாயார் திருமதி ஜோகோமாயா தேவி மற்றும் பெரியோர்களும் மற்றும் பலரும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தந்திகளும் தபால்களும் வெள்ளமென வந்தன. அவை, தமது ஆற்றொணாத்துயரைத் தெரிவிப்பதுடன், இந்த துக்க சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதைத் தீர விசாரிக்கவும் பிரதமரை வற்புறுத்தி எழுதப்பட்டவை. ஆனால், நாட்டின் வேதனையின் வெளிப்பாடு எந்தவித எதிர்வினையையும் தூண்டவில்லை. இந்த மாமனிதரின் மரணம் இன்னமும் புரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது.இதே போன்ற மற்ற நிகழ்வுகளில் உடனுக்குடன் விசாரணை நடந்திருக்கிறது. ஆனால், இந்த மரணத்த்ற்கு மாத்திரம் மெளனமே பதிலாக இருந்தது. இது ,அயோக்கியத்தனமான அலட்சியமா அல்லது குற்றவுணர்ச்சியின் பயமா என்றே தெரியவில்லை.

இருப்பினும், சந்தேகத்திற்குரிய முறையில் நிகழ்ந்த டாக்டர் முகர்ஜீயின் மறைவு மக்களிடையே ஏற்படுத்திய கடுமையான சீற்றத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. அவை நாடெங்கும் குறிப்பிடத்தக்க தொடர் நிகழ்வுகள் ஏற்படக் காரணமாயின. அந்நிகழ்வுகள் நாட்டின் ஒற்றூமைக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்தன.

தலையாயதாக, பர்மிட் முறை ஒழிந்தது.

அதுவரை, ஜம்மு காஷ்மீர் மீது உச்ச நீதிமன்றமோ அல்லது, தேர்தல் கமிஷனோ அல்லது தணிக்கை மற்றும் கணக்காய்வு அதிகாரியோ எந்தவிதமான சட்ட அதிகாரமும் கொண்டதில்லை. முகர்ஜீயின் மறைவுக்குப் பிறகு, இம்மூன்று அரசியல் அமைப்புகளின் அதிகாரம் அம்மாநிலத்திற்கும் நீட்டிக்கப் பட்டது. அதுவரை மாநிலத்தின் முதல்வர் பிரதமர் என்றும் , மாநிலத் தலைவர் ஸதாரே ரியாஸத் என்றும் அழைக்கப்பட்டனர். அதாவது கருத்து ரீதியாக, மத்திய ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மீது எந்த அதிகார்மும் அற்றவர்களாக இருந்தனர்.

டாக்டர் முகர்ஜீயின் அமரத்வம் இந்த நிலைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மாநில பிரதமர் முதல்வரானார்; ஸதரே ரியாஸத் ஆளுனர் ஆனார். அதோடு, மத்திய அரசின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் செல்லுபடியாகத் தொடங்கியது.

ஒரு பக்கம், அரசியல் சட்டங்கள் இரு விதமாக இருந்தாலும் , வீர முழக்கத்தின் மூன்று கொள்கைகளில் , இரண்டு பிரதமர்கள் ஒன்றானதும், தேசியக் கொடி அம்மாநிலத்தில் வீசிக் கொண்டிருப்பதும் , மிகப் பெரிய சாதனைகள்.

இரு பிரதமர்கள் ஒருவரானது தவிர, இரு உச்ச நீதி மன்றங்கள் ஒன்றாயின; இரு தேர்தல் அதிகார மையங்கள் ஒன்றாயின; இரு தணிக்கை அதிகாரிகள் ஒன்றாயினர் …  இவையெல்லாம் டாக்டர் ஷ்யாம பிரசாத் முகர்ஜீ என்கிற மாமனிதரின் உயிர்த் தியாகம் ஏற்படுத்திய தோற்றங்கள், மாறுதல்கள்.

அரசியல் சட்டம் 370-ம், நீக்கப்பட்டு, இரு சட்டங்களும் ஒன்றாகும் நந்நாளை நாடு ஆவலுடன் எதிர் நோக்கி நிற்கிறது. !

நன்றி ; எல்.கே. அத்வானி

நன்றி தமிழில்; ராஜகோபாலன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...