பாகிஸ்தானிடம் மென்மையானபோக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கொண்டிருப்பது ஏன்?

பாகிஸ்தானிடம் மென்மையானபோக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கொண்டிருப்பது ஏன்? எல்லையில் இந்தியவீரர்கள் கொல்லப்பட்டது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே.அந்தோனி வெளியிட்ட கருத்துக்கு பாஜக. தலைவர்கள் தங்கள் அதிருப்தியை பிரதமரை நேரில்சந்தித்து தெரிவித்தனர்.

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான நிலஎல்லை ஒப்பந்தம்தொடர்பாக விவாதிக்க வருமாறு பா.ஜ.க தலைவர்களை பிரதமர் மன்மோகன்சிங் அழைத்திருந்தார்.

இதையடுத்து, பாஜக. மூத்த தலைவர் அத்வானி, தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி ஆகியோர் பிரதமரை புதன் கிழமை நேரில் சந்தித்தனர். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே.அந்தோனியும் உடன் இருந்தார்.

சுமார் ஒருமணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, எல்லையில் இந்தியவீரர்கள் கொல்லப்பட்டது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே.அந்தோனி வெளியிட்ட கருத்துக்கு பாஜக. தலைவர்கள் தங்கள் அதிருப்தியை பிரதமரிடம் தெரிவித்தனர்.

அந்தோனியின் இந்தத்தவறுக்கு அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் விளக்கம் தருமாறு அவர்கள் கோரினர். இது தொடர்பாக வியாழக்கிழமை அறிக்கை வெளியிடப்படும் என அவர்களிடம் பிரதமர் உறுதியளித்ததாக தெரிகிறது.

பாகிஸ்தானிடம் மென்மையானபோக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கொண்டிருப்பது ஏன்? என்றும் இவ்வளவு தீவிரமானதொரு பிரச்னையை அரசு மிகச்சாதாரணமாகக் கையாள்வது ஏன்? என்றும் அவர்கள் பிரதமரிடம் கேள்வியெழுப்பினர். இந்தவிஷயத்தில் ராணுவம் கூறுவதற்கும், பாதுகாப்பு அமைச்சர் கூறுவதற்கும் இடையில் முரண்பாடிருப்பது ஏன் என்று அறிந்துகொள்ள விரும்புவதாக பாஜக. தலைவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்தியவங்கதேச எல்லை ஒப்பந்தத்துக்கு தங்கள் எதிர்ப்பையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த உடன் பாட்டால் இந்தியா பெறுவதைவிட, விட்டுக்கொடுப்பது அதிக நிலமாக இருக்கும் என அவர்கள் பிரதமரிடம் எடுத்துக்கூறினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...