5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்

 உத்தரபிரதேசம், குஜராத், மேற்குவங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

கவர்னர்கள் பதவி விலகல் மற்றும் இடமாற்றம் காரணமாக காலியாகஉள்ள 5 மாநிலங்களுக்கு நேற்று புதியகவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, உத்தரபிரதேச மாநிலகவர்னராக ராம்நாயக் நியமிக்கப்பட்டார். அங்கு கவர்னராக இருந்த பிஎல்.ஜோஷி ராஜினாமாசெய்ததால், காலியாக இருந்த அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு வயது 80. வாஜ்பாய் அரசில், பெட்ரோலியத் துறை மந்திரியாக இருந்தவர் ராம்நாயக். ஒரே அரசில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பெட்ரோலிய இலாகாவை வகித்த ஒரேநபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

3 தடவை எமபி.யாக இருந்துள்ளார். . நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கடந்த ஆண்டே அவர் அறிவித்துவிட்டார் .

எம்.கே.நாராயணன் பதவி விலகியதால், காலியாக உள்ள மேற்குவங்காள மாநில கவர்னர் பதவிக்கு கேசரிநாத் திரிபாதி நியமிக்கப் பட்டுள்ளார். வருகிற நவம்பர்மாதம், அவருக்கு 80 வயது ஆகிறது. அவர் உத்தரபிரதேச முன்னாள் சபாநாயகர் ஆவார்.

மேலும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். சிலபுத்தகங்களை எழுதி உள்ளார். மாணவபருவத்தில் காஷ்மீர் பிரச்சினைக்காக போராடி சிறைசென்றுள்ளார். 5 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

கமலாபேனிவால் மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால், காலியாக உள்ள குஜராத் கவர்னர்பதவிக்கு ஓம்பிரகாஷ் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். 78 வயதான இவர், டெல்லிமாநில பா.ஜ.க முன்னாள் தலைவர் ஆவார்.

மாணவபருவத்தில் இருந்தே பா.ஜ.க.,வுடன் தொடர்புடையவர். அதன் மாணவர் பிரிவு தலைவராகவும், டெல்லி பல்கலைக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கதலைவராகவும் இருந்துள்ளார். 1994 முதல் 2000-ம் ஆண்டுவரை, டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருந்துள்ளார்.

சேகர்தத் பதவி விலகியதால், காலியாக உள்ள சத்தீஷ்கார் மாநிலகவர்னர் பதவிக்கு பல்ராம் தாஸ் தாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். 87 வயதான இவர், ஜன சங்கத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார்.

1969-ம் ஆண்டு, பஞ்சாப்மாநில துணை முதல்மந்திரியாக இருந்தார். பிறகு, பிரகாஷ் சிங் பாதல் மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக பதவி வகித்தார். 6 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

நாகாலாந்து மாநில கவர்னர்பதவிக்கு பத்மநாபா பாலகிருஷ்ண ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பா.ஜ.க.,வின் வட கிழக்கு பிராந்திய பணிக்குழுவின் உறுப்பினர் ஆவார். பா.ஜ.க.,வின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அமைப்பின் துணை அமைப்பாளராகவும் உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...