தேவேந்திர பட்னாவிஸ் , நிதின் கட்காரி சந்திப்பு

 மராட்டிய முதல்வர் பட்டியலில் முக்கியத்துவம் வகித்து வரும் பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசினார் .

மராட்டிய சட்ட சபை தேர்தல் முடிவில் பா.ஜ.க அமோகவெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், மராட்டியத்தின் அடுத்த ஆட்சியை பா.ஜ.க தான் உறுதியாக அமைக்க உள்ளது . இதில் முதல்வராக அதிக வாய்ப்பு இருப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் பெயர் அடிபடுகிறது.

44 வயதான அவர், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நம்பிக்கைக்குரிய நபராக திகழ்வதுடன், பலபுரட்சிகரமான முடிவுகளையும் எடுத்து அவ்வப் போது அசத்தி இருக்கிறார். இதன் காரணமாகவே, தேவேந்திர பட்னாவிசை 'நாக்பூர் நாட்டுக்கு அளித்தகொடை' என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் புகழ்ந்தார். இந்த சட்ட சபை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்ட தேவேந்திர பட்னாவிஸ் தற்போது 4வது முறையாக வெற்றிபெற்று எம்எல்ஏ. ஆக தேர்வாகி உள்ளார். தவிர நாக்பூரின் இளவயது மேயர் என்ற பெருமையையும் அவர் ஏற்கனவே படைத்து இருக்கிறார்.

தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர்மேயராக பதவியேற்ற போது அவரது வயது வெறும் 27 தான். சிறிய வயதிலேயே அவர் எண்ணற்ற நல திட்டங்களை அறிமுகப்படுத்தி நாக்பூர் மக்களின் நம்பிக்கையை கவர்ந்தவர் ஆவார். இந்த சாதனைகளை அவர் படைத்ததன் மூலமாக , அவருக்கு முதல்மந்திரி பதவி கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப் படுகிறது. இந்நிலையில் இன்று தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். இந்தசந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்று தெரிவிக்கப்படவில்லை. தீபாவளிவாழ்த்து தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...