மத மாற்றத்தால் என்ன நிகழும் என்பதை கனடாநாட்டு பாராளுமன்ற தாக்குதல் உலகிற்கு உணர்த்துகிறது

 மதமாற்றத்தால் என்ன நிகழும் என்பதை கனடாநாட்டு பாராளுமன்ற தாக்குதல் உலகிற்கு உணர்த்தியுள்ளது என இந்துமுன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கனடா நாட்டு பாராளுமன்றம் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது.

இதில் ஈடுபட்டவர்களில் கொலையுண்டவர் அந்நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவர் சமீபத்தில் மதம் மாறியவர் என்பது தெரியவந்துள்ளது. மத மாற்றம் என்பது ஒரு வழிபாட்டிலிருந்து வேறொருவழிபாட்டை ஏற்றுக் கொள்வது என்பதில்லை. தனது தேசியத்தின் அடையாளத்தை நீக்கிக் கொள்வதும், தான்பிறந்து, வளர்ந்த தேசத்தை அழித்தொழிக்கும் அளவிற்கு மூளைசலவை செய்யப்படுகிறது என்பதையும் இந்தத் தாக்குதலில் உலகம் உணர்ந்திருக்கும். இதனைத்தான் செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவமும், இஸ்லாமும் செய்துவருகின்றன. இதற்கு பலசம்பவங்கள் உலகம் பார்த்துள்ளது, அனுபவித்துள்ளது.

உயிர்களை நேசிக்கும், பரந்த மனப்பான்மை கொண்டது மான இந்துமதம், கடந்த பத்தாயிரம் ஆண்டு உலக சரித்திரத்தில் எவரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றியதில்லை, எந்த ஒருநாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு செய்ததில்லை. உலகிலேயே வேற்று மதத்தினரின் வழிபாட்டு தலங்களைக் கட்டிக்கொடுத்தது இந்துக்கள், உலகில் வெறுத்து ஒதுக்கப்பட்ட பார்சிகளையும், யூதர்களையும் அரவணைத்தது இந்துக்கள் என்பது சரித்திர உண்மை. ஆனால், இந்துக்களை அழித் தொழிக்க, இந்துசமயத்தை, நூல்களை அழிக்க முற்பட்டவர்கள் தான் முகலாயர்களும், மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளின் ஆக்கிரமிப்பாளர்களும் என்பதை நினைவு படுத்துகிறோம். மனிதநேயம், மனித உரிமை பேசுபவர்கள், நடுநிலையாளர்கள் இது குறித்து உலக அளவில் விவாதம் நடத்தி தீர்வுகாண வேண்டும்.

மற்றமதங்களை வெறுக்கும், அழித்தொழித்து தனதுமதமே உலகில் இருக்கவேண்டும் எனும் கருத்தை போதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மதவாத சக்திகளுக்கு வரும் நிதியை தடுக்கவேண்டும். மதவாத சக்திகளின் செயல் பாட்டை கண்காணிக்க வேண்டும். மனித இனத்திற்கு அச்சுறுத்தலான மத மாற்றத்தை தடுக்கவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...