காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கனவு இனிதே நிறைவேறுகிறது

 காங்கிரசையும் ஊழலையும் பிரிக்கவே முடியாது, அவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றது . காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை இனிதே நிறைவேற்றுவோம் என்ற பிரதமர் மோடியின் 2013 பிப்ரவரி 15 தேதிய சூளுரை இனிதே நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது பாஜக.,வின் மகாராஷ்ட்ரா, அறியானா மாநில தேர்தல் வெற்றியும், காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட செய்தியும்.

நடந்து முடிந்த மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்ட சபை தேர்தலில் பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றியை பெற்று ஆட்சியமைக்க போகிறது. மகாராஷ்டிராவில் பாஜக தான் போட்டியிட்ட 288 தொகுதிகளில் 122 தொகுதிகளிலும் , அரியானாவில் போட்டியிட்ட 90 தொகுதிகளில் 47 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறது.

மகராஷ்ட்ராவில் பாஜக.,வின் 25 வருட கூட்டணி நண்பனான சிவசேனா 122 தொகுதிகளை மட்டுமே பாஜக.,வுக்கு தருவோம் என்றும், தாங்கள் 166 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும், பாஜக.,வுக்கு பெரிய செல்வாக்கெல்லாம் இல்லை தங்கள் தயவு இன்றி கரைசேரவே முடியாது என்றுமகூறி , பாஜக,வை உதாசினப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேறவேண்டிய நிர்பந்தத்தையும் உண்டாக்கியது.

பாஜக,வோ சிவசேனா தருவோம் என்று கூறிய 122 எண்ணிக்கையில் வெற்றி பெற்று நண்பனின் நம்பிக்கையை மெய்யாக்கியுள்ளது.. அதுவும் 20 நாள் பிரச்சாரத்தில், 1990 க்கு பிறகு எந்த கட்சியும் தனித்து 100 தாண்டிராத நிலையில் 122 தொகுதிகளில் வெற்றிப்பெற்று  தேவேந்திர பட்நாவிஸ் என்ற இளம் சிங்கத்தின் தலைமையிலேயே பாஜக ஆட்ச்சியமைகிறது .

இதில் பாஜக.,வை பலவீனமாக எடைபோட்ட சிவசேனா 63 தொகுதிகளில் மட்டுமே வென்று இரண்டாம் இடத்தையும், காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் 42, 41 என வென்று மூன்றாம் , நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன்..

அதேபோன்று அரியானாவில் காங்கிரஸ் கட்சியை மூன்றாம் இடத்துக்கும், அங்கும் பாஜக.,வை உதாசினப்படுத்தி. தனி அணி கண்ட கூட்டணி கட்சி நண்பனான அரியானா ஜன்கிந் காங்கிரஸ் கட்சியை நான்காம் இடத்துக்கும் தள்ளி 47 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் பழுத்த மூத்த தலைவரான கத்தார் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக.

அறியானாவிலும் , மகாராஷ்டிராவிலும் எதிர்க் கட்சியினர் தங்கள் தேர்தல்
பிரச்சாரத்தில் மக்களிடையே குறுகிய மனோபாவங்களை தூண்ட கூடிய உள்ளூர் பிரச்சனைகளுக்கும் , பிரிவினையை தூண்ட கூடிய மண்ணின் மைந்தர் விவகாரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை தந்தனர். மோடி அலையெல்லாம் பாராளுமன்ற தேர்தலுடன் முடிந்து விட்டது , மாநிலத்தில் எல்லாம் மோடி அலை உருவாகாது என்றனர்.

ஆனால் மோடியோ நான் உங்களின் சேவகன்; இந்த நாட்டின் முதல் சேவகன். வளர்ச்சி, வளர்ச்சி ,வளர்ச்சி. வளர்ச்சி ஒன்றே எங்கள் இலக்கு ஒவ்வொரு மாநிலத்தையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதன் மூலமாக மட்டுமே , ஒட்டு மொத்த தேசத்தின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்த முடியும் என்று முழங்கினார். மோடி அலை உருவானது. ஒட்டு மொத்த மக்களும் தங்கள் பெருவாரியான வாக்குகளை பாஜக.,வுக்கு அளித்து மோடி அலையை உறுதிப்படுத்தியும் விட்டனர்

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...