விமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற ராமதாசின் கருத்து பா.ஜ., கூட்டணியை விட்டு விலகி போனவர்களுக்குதான்

 பிரதமர் நரேந்திர மோதி , விமர்சனத்துக்கு அப்பாற் பாட்டவர் அல்ல என்ற , பா.ம.க., நிறுவனர் ராமதாசின் கருத்தில், எனக்கும் உடன்பாடு உண்டு,'' என்று , பா.ஜ.க, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், பாஜக.,வுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்த இல.கணேசன், நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ.,வில், ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கட்சித் தலைவர் முதல் தொண்டர்வரை, உறுப்பினர் பொறுப்பை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அதற்கான பணி, தற்போது, நாடுமுழுவதும் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே, 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதை, ஒரு கோடியாக மாற்ற, நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

திருச்சி மாவட்டத்தில், ஒரேநாளில், ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில், 18 வயது நிரம்பியவர்களிடம், பா.ஜ.,வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நல்லவரவேற்பு உள்ளது. உறுப்பினர்களை சேர்க்க, வீடு வீடாக செல்லும்போது, பா.ஜ., நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு எதுவும் வரவில்லை.

"பிரதமர் நரேந்திர மோதி , விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல' என ராமதாஸ் கூறியகருத்தில், எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், விமர்சனங்கள் நாகரீகமான முறையில் இருக்கவேண்டும் எனவும், ராமதாஸ் கூறியுள்ளார். இந்த கருத்து பா.ஜ., கூட்டணியைவிட்டு விலகி போனவர்களுக்குதான்; எங்களுக்கு அல்ல.

ஸ்ரீரங்கம் தொகுதியில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியிருப்பது, இடைத் தேர்தலுக்கான தயாரிப்பாக கூட இருக்கலாம். ஸ்ரீரங்கம் தொகுதியில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்த கருத்தை, யார் முன் வைக்கிறார்கள் என்பதை பொறுத்துதான், பா.ஜ., இறுதிமுடிவு இருக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...