எய்ம்ஸ் கல்லூரி தமிழ்நாட்டில் அமைப்பதற்கு விரைவில் ஆய்வுக் குழு

 தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைக்க விரைவில் ஆய்வுகுழு அனுப்பப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல், தீவிர மூளை அழற்சி நோய் குறித்த ஆய்வரங்கம் சென்னையில் நடந்தது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜய பாஸ்கர் ஆய்வரங்கை தொடங்கி வைத்து, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரதிட்டம் குறித்த கையேட்டினை வழங்கினார். இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பெற்றுகொண்டார். ஆய்வரங்கில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பேசியதாவது: தமிழ்நாடு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக சுகாதார திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்ற இலக்கை அடைந்துள்ளது பாராட்டுக்குரியது. தேசியளவில் குழந்தை இறப்புவிகிதம் மற்றும் பேறுகால தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் குறைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பு திட்டம் தமிழகத்தில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட இங்கு 93 சதவீதம் இலக்கு அடையப்பட்டுள்ளது. மத்திய அரசு சுகாதார திட்டங்களுக்காக வழங்கும் நிதியை, தமிழ்நாடு சிறப்பாக பயன்படுத்தி திட்டங்களை நிறை வேற்றுகிறது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக மருந்துகளை கொள்முதல் செய்து பாதுகாத்து மருத்துவமனைகளுக்கு வினியோகம்செய்து வருகிறது. இந்த மாதிரியை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால், நாடுமுழுவதும் மக்களுக்கு மருந்துகள் சீராக சென்றடையும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்.

எய்ம்ஸ் கல்லூரி தமிழ்நாட்டில் அமைப்பதற்கு விரைவில் ஆய்வுக் குழு அனுப்பி வைக்கப்படும். மெட்ரோ ரத்தவங்கி சென்னையில் அமைக்கவும், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மகப் பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதோடு தேவையான நிதியையும் வழங்கும். மேலும், தமிழகத்தில் சார்பில் கோரப்பட்ட அனைத்து மருத்துவ திட்டங்களையும் செயல்படுத்த மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். என்று அவர் பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...