எல்லா மதங்களையும் அரவணைப்பதே ஹிந்துத்துவம்!

 'எதிர்கால இந்தியா, ஹிந்துக்களுக்கும் மட்டுமானதா? அல்லது முஸ்லிம்களுக்கும் இந்தியாவில் இடமுண்டா? என்ற அபத்தமான கேள்வியை, பிரதமர் நரேந்திர மோதியிடம் ஒரு நபர் கேட்டார்.

அதற்கு, நரேந்திர மோதி அளித்த தெளிவான பதில் வருமாறு:- ஹிந்து என்பதையோ அல்லது ஹிந்துத்துவம் என்பதையோ சரியாகப் புரிந்து கொள்ளாததால்தான் இக்கேள்வி எழுந்துள்ளது. 'சத்தியம் ஒன்றே, அதை நோக்கிச் செல்லும் பாதைகள் பலவுள்ளன' என்பதுதான் ஹிந்துத்துவத்தின் சாராம்சமாகும். ஒரு சமுத்திரத்தில் பல நதிகள் சங்கமிப்பதைப் போல இதை எடுத்துக் கொள்ளவேண்டும்.

இறைவன் ஒருவனே என்று சொல்கிறது, ஹிந்துத்துவம் முஸ்லிம்களின் கடவுள் வேறுபட்டவர், கிறிஸ்தவர்களின் கடவுள் மாறுபட்டவர், சீக்கியர்களின் கடவுள் வித்தியாசமானவர் என்றெல்லாம் ஹிந்துத்துவம் உரைப்பதில்லை.

இந்தக் கடவுள் மட்டுமே மேலானவர் என்று கூறி மற்றவர்களின் உணர்வுகளை ஹிந்துத்துவம் ரணப்படுத்துவதில்லை. யார் யாருக்கு எந்தக் கடவுள் பிரியமோ அந்தக் கடவுளை இஷ்ட தெய்வமாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக கட்டுக்கோப்பான உடல் மீது நாட்டம் கொண்டவர் ஆஞ்சநேயரை வழிபடலாம். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தத்தமது கடவுள்களை வழிபடுவதை ஹிந்துத்துவம் புறந்தள்ளுவதில்லை.

ஜெர்மனியைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் யூதர்களை வேட்டையாடின என்று இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், உலகிலேயே யூதர்களை வரவேற்ற நாடு இந்தியா மட்டும்தான். இந்தியாவில் யூதர்கள் பல நூற்றாண்டுகளாக, நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலின் நாடாளுமன்றம் முதல்முறையாகக் கூடியபோது, இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நெருப்பை வழிபடும் பார்சிகள் 7 ஆம் நாற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தனர். முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள், பெர்சியாவிலிருந்து பார்ஷிகளை விரட்டியடித்ததால்தான் அவர்கள் குஜராத் கடலோரப் பகுதியில் தஞ்சம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியை ஆண்டு வந்த ஹிந்து மன்னர், பார்ஷிகளை வரவேற்றார். நெருப்புக் கடவுளை தங்களோடு கொண்டு வந்துள்ளதாவும் அனலிறைவனுக்கு ஆலயம் கட்ட விரும்புவதாகவும் ஹிந்து மன்னரிடம் தெரிவித்த பார்ஷிகள், இந்த ஆலயம் அமைக்கப்படும் இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குள் பார்ஷி அல்லாத யாரையும் அனுமதிக்ககூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.

பார்ஷிகள் கூறியதைக் கேட்ட ஹிந்து மன்னர், அனலிறைவனுக்கு ஆலயம் கட்ட மறுப்பு எதுவுமில்லை என்று தெரிவித்தார். மேலும், யாரையும் விளக்குவது ஹிந்து பாரம்பரியம்மல்ல என்ற போதிலும் உங்களின் கோரிக்கையை ஏற்று பார்ஷிகள் அல்லாதோரை அனலிறைவன் ஆலயம் அருகே செல்ல அனுமதிக்கவில்லை என்று ஹிந்து மன்னர் உறுதியளித்தார்'. அனைத்து மதத்தினரையும் அரவனைப்பது ஹிந்துத்துவத்தின் இயல்பாகும்.

தனது வழிமுறை மட்டுமே மேலானது மற்றவை தாழ்ந்தவை என்று வேறு மதங்கள் கருதுகின்றன. ஆனால் எம்மதமும் சம்மதம் என்பதே ஹிந்துத்துவ அணுகுமுறையாகும். மதங்களிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதால்தான் முரண் பாடுகள் ஏற்படுகின்றன. மோதல்கள் வெடிக்கின்றன. பயங்கரவாதம் விஸ்வரூபமெடுக்கிறது, வன்முறை மேலோங்குகிறது.

ஹிந்துத்துவம் மட்டுமே வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தத்தமது நெறிகளை வழுவாமல் பின்பற்றவேண்டும் என்பதில் உறுதிபாட்டுடன் உள்ளது. மற்ற மதங்களால் பேராபத்து ஏற்படும் என்று ஹிந்துத்துவம் கருதுவதில்லை.

எல்லாவற்றையும் உள்ளடக்கிய விசாலமான கண்ணோட்டம், ஹிந்துத்துவத்தின் பிரதான அம்சமாகும்.

எனவே இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இடமுண்டா என்ற கேள்வி, நமது பாரம்பரியம் பற்றிய புரிதல் இல்லாததாலேயே எழுந்துள்ளது.

நரேந்திரமோதியின் இப்பதில், கேள்வி எழுப்பியவரை மௌனமாக்கிவிட்டது.

நன்றி : ஒரே நாடு
– ஆரணலேறு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...