இந்தியாவின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் வியப்படைய வைக்கிறது ,

 நில நடுக்கத்தால் உருக் குலைந்திருக்கும் நேபாளாத்தில் இந்தியா செய்துவரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் வியப்படைய செய்வதாக, பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாராட்டியுள்ளார்

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25ம் தேதி) கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கத்துக்கு 5,500-த்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் காயங்களுடன் உயிர்பிழைத்து நிவாரண உதவியை நாடும் நிலையில் உள்ளனர்.

நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு மறு சீரமைக்கும் பணிகளை விமான படையும் ராணுவமும் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் பணி உலகநாடுகளை வியக்க செய்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு நில நடுக்கத்தால் பலியான இந்தியர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அத்துடன், நேபாளத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் வியப்படைய செய்வதாக கூறி நவாஸ்ஷெரீப் பாராட்டு தெரிவித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

மேலும் இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "இயற்கை சீற்றங்கள் போன்ற சம்பவங்களால் பேரழிவுகள் ஏற்படும் போது நிவாரண மற்றும் மீட்புபணிகளை மேற்கொள்வது குறித்து சார்க் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்த கூட்டுபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்தபயிற்சி நாம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை முன்னடுக்க வலியுறுத்துகிறேன்" என்று ஷெரீப் உடனான உரையாடலின் போது தெரிவித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...