ஜாதிப்பிரிவினைக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்

 பிஹார் மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளேன், பாதிப்பை ஏற்படுத்தும் ஜாதிப்பிரிவினைக்கு அப்பாற்பட்டு பிஹார் மக்கள் செயல்படவேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கவிஞர் ராம்தாரிசிங் திங்கரின் படைப்புகளின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை டெல்லியில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவின் மேற்குப் பகுதி வளம் கொழிக்கலாம். ஆனால், கிழக்குப் பகுதியின் ஞானம் அதனை முழுமைப்படுத்த வேண்டும். இல்லா விட்டால் இந்தியா தனது முழுத்திறனை அடையமுடியாது. செல்வமும் கல்வியும் இணைந்தால், இந்தியா எவ்வளவுவேகமாக முன்னேறும் என்பதை இந்த உலகம் காணும்.

பிஹார் ஜாதியை மறந்து விட்டு நல்லொழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். ஓரிருஜாதிகளின் உதவியுடன் நீங்கள் ஆட்சி நடத்தமுடியாது. அனைவரின் ஆதரவும்தேவை. நீங்கள் ஜாதிக்கு அப்பாற்பட்டு செயல்படா விட்டால் பிஹார் மக்களின் வாழ்க்கை அழிந்து விடும் என கவிஞர் திங்கர் 1961களிலேயே தனது படைப்பில் தெரிவித்திருக்கிறார்.

ராம்தாரிசிங் திங்கரின் படைப்புகள் ஜெயப் பிரகாஷ் நாராயணின் கொள்கைகளுக்கும் இளைஞர்களுக்கும் இடையே பாலமாக விளங்குகின்றன. அவரின் படைப்புகளில் கனல்இருக்கிறது. அது எரித்து விடுவது அல்ல. மாறாக வருங்கால தலைமுறைக்கு ஒளியூட்டுபவை. அவரின் படைப்புகள் தற்காலத்துக்கும் பொருத்தமாக இருக்கின்றன.

தேசத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு மேற்குவங்கம், பிஹார், கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மிக முக்கியமானது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...