பிரதமர் மோடியின் தகுதிக்கு முன்பு, குடும்ப அரசியல் எல்லாம் எடுபடாது. அவர் தலைமை பண்புக்கு ரோல்மாடலாக இருக்கிறார். அவரை வெற்றிகொள்ள முடியாது. அவர் விரைந்து கற்கும் திறன் படைத்தவர். தினமும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்கிறார். அவருடைய மிகப்பெரிய பலமே சிறந்த தகவல் தொடர்பாளராகவும், சிறந்த பேச்சாளராகவும்
இருப்பதுதான். இவை எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு புகழையும் செல்வாக்கையும் உருவாக்கி உள்ளது. அவருடைய பர்சனா லிட்டி அனைவரையும் வியக்க வைக்கிறது.
மோடியின் வெற்றிகளை பார்த்து குடும்ப அரசியலில் உள்ளவர்கள் அவரை குறி வைத்து அரசியல் நடத்துகின்றனர். ஆனால், அதில் வெற்றி பெற முடியாது. கடந்த சில ஆண்டுகளாக மோடிக்கு போராட்டங்களாக இருந்தன. ஆனால், அந்த கால கட்டத்தில் அவர் நிறைய கற்றுக் கொண்டார். தனித்து முடிவெடுப்பதில் வல்லவர். ஒரு முறை முடிவெடுத்து விட்டால், அதை செயல்படுத்தும் வரை வேகமாக செயல்படுபவர். எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.
வழக்கமாக அரசியல் தலைவர்கள் ஊடகங்கள் மூலம் தான் மக்களுடன் தொடர்புவைத்து கொள்வார்கள். மோடி அப்படி இல்லை. மக்களுடன் நேரடியாக தொடர்புவைத்து கொள்கிறார். அதனால் தான் ஊடகங்கள் செய்திகளை திரித்து வெளியிடும்போது, உடனடியாக மக்களிடம் நேரடியாக பேசி பதிலடி கொடுக்கிறார். ஊடகங்களின் விமர்சனங்களை கையாள்வதில் மோடிக்கு எந்தசிரமமும் இருந்ததில்லை.
குஜராத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மோடிக்கு எதிராக ஊடகங்கள் தீவிரபிரச்சாரம் செய்தன. ஆனால், மோடி மக்களை நேரடியாக சந்தித்து வெற்றியும்பெற்றார். பிரதமர் மோடியின் வெற்றி உண்மையில் நம்மை மலைக்கவைக்கிறது. அதிசயிக்க வைக்கிறது. தெளிவான சிந்தனை உள்ளவர் மோடி. அதன்மூலம் நாட்டை சிறந்தமுறையில் வழிநடத்தி செல்கிறார். நிர்வாகத்தில் அவருடைய உத்தரவுகள், திட்டங்களை செயல்படுத்தும் முறை, முன்னின்று வழி நடத்திச் செல்லும் திறன், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இருந்து பணிகளை தாமேபெற்று அவற்றை நிறைவேற்றி வைப்பது, சோர்வு அடையாமல் உள்ள அவரது உடல்பலம்.. இவை எல்லாம் சேர்ந்துதான் நமக்கு ரோல்மாடல் தலைவராக இருக்கிறார்.
‘தாருண் பாரத்’ என்ற நாளிதழில் பிரதமர் மோடியை புகழ்ந்து அருண் ஜேட்லி எழுதியது
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.