நாட்டின் உயர்ந்த பீடத்தை அடைந்த பெருமைக்குரியவர்

பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு உள்ளூர் தொடங்கி உலகத்தலைவர்கள் வரை வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

எளியகுடும்பத்தில் பிறந்துவளர்ந்து அரசியலில் படிப்படியாக முன்னேறி நாட்டின் உயர்ந்த பீடத்தை அடைந்தபெருமைக்கு சொந்தக்காரர்.

வாஜ்பாய் ஆட்சிக்க்குபிறகு சரிவை சந்தித்துவந்த பாஜகவை பீனிக்ஸ் பறவையாக மாற்றி உயரபறக்க வைத்திருக்கும் அரசியல் வித்தகர்.

இன்று நாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, தனது சிறு வயதில் அம்மாவுக்கு உதவிக்கரமாக வீட்டுப் பணி செய்தவர். பள்ளிமுடிந்ததும் வாட் நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை நடத்திவந்த தேநீர் கடைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த மோடி, அங்கு அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்வார். பருவவயதில் மோடியின் நண்பர்கள் பலரும் விளையாட்டு, கேலிகிண்டல் எனச் சுற்றித்திரிய இவர் மட்டும் குடும்ப பொறுப்பை தாங்கி நின்றார்.

பிரதமர் மோடியை பொறுத்தவரை தனது சிறுவயதில் இருந்தே எந்த ஒரு காரியத்தையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்புவர். சவால்களை ஏற்று அதை வெல்ல வேண்டும் என நினைப்பவர். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டு போவது அவருக்கு பிடிக்காத ஒன்று என்பது அவரைநெருங்கி அறிந்தவர்கள் கூறியதகவல். அந்த வைராக்கியமும், லட்சியமும்தான் அரசியலில் கடும் எதிர்ப்புகளையும் மீறி அவரை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது.

தன்மீதான விமர்சனங்களை கண்டு எப்போதும் கலங்காதவர் மோடி. தனது நடை, உடை, பேச்சு, உள்ளிட்ட விவகாரங்களில் அதிககவனம் செலுத்தக்கூடியவர். எப்போதும் நேர்த்தியான ஆடை அணிந்து கம்பீரமாக காட்சியளிக்கவேண்டும் என நினைப்பவர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்துக் கொள்ளும் தலைவராக உலக அரங்கில் திகழ்பவர்.

பிரதமர் மோடியின் உரையை சற்று கூர்ந்து கவனித்தால் ஒன்று புரிய வரும். அவரது மேடைப் பேச்சுகள் எவ்வித பிசிறுமின்றி சொல்ல வரும் கருத்தை வெகுஜன மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் நயமாக எடுத்துரைப்பதை காண முடியும். அதேபோல் ஒருவரை பார்த்து பேசிய சில நிமிடங்களில் அவரது குணாதிசயங்கள், திறமைகளை துல்லியமாக கணிக்கக்கூடிய ஆற்றல் பிரதமர் மோடிக்கு உள்ளதாக பத்திரிகையாளர் வினோத் கே.ஜோஸ் என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...