"பிஹாரின் முதல் 3 கட்ட வாக்குப் பதிவுகள் அமைதியான முறையில் நடைபெற்றன. இந்ததேர்தல் முடியும் தறுவாயில் மெகாகூட்டணி பொறுமையை இழக்கும்.
நிதிஷ் குமார், லாலு ஆகியோருக்கு கூறிக்கொள்கிறேன், எவ்வளவு சேற்றைவரி இரைக்கிறீர்களோ அவ்வளவு தாமரைகள் மலரும்.
நான் அன்னியன் என்கிறார் நிதிஷ்குமார். இந்தியாவின் வலுவான உறுப்பாகிய பிஹார் மக்கள் வாக்களித்து பிரதமராக்கி யுள்ளனர். நான் பாகிஸ்தான் பிரதமரா அல்லது வங்கதேச அல்லது இலங்கை பிரதமரா?
என்னை அன்னியன் என்று அழைப்பவர் சோனியாவை அன்னியர் என அழைப்பாரா? தாங்கள் வகித்தபொறுப்புக்கு நியாயம் வழங்க முடியாதவர்களே இத்தகைய அரசியல் விளை யாட்டுகளில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்புவார்கள்.
என்னை அவமதித்து அவமதித்து அவர்கள் களைத்து விட்டார்கள். தற்போது பிகார் மக்களை அவர்கள் அவமதிக் கிறார்கள். எனது கூட்டத்துக்கு வரும் மக்கள் அனைவரும் பணம் வாங்கிக்கொண்டு கூட்டத்துக்கு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். இது பிகார்மக்களுக்கு அவமானம் அல்லவா? பிகார் மக்களை அவமதிப்பதாகாதா?
ஒரு இளைஞர் நம் கட்சிக்கு வாக்களிக்கிறார் என்றால், அந்தக்கட்சி நாட்டுக்கு என்ன செய்தது என்பதை அறிய அவருக்கு உரிமை உள்ளது.
காங்கிரஸ் பிஹாரை 35 ஆண்டுகள் ஆண்டது. லாலுஜி 15 ஆண்டுகள் ஆண்டார், நிதிஷ்குமார் 10 ஆண்டுகள் ஆடினார். மொத்தமாக 60 ஆண்டுகள் ஆண்டு ள்ளனர். இந்த 60 ஆண்டுகால தங்களது ஆட்சிக்கான நியாயத்தை அவர்கள் கோரமுடியுமா?
லாலுவின் ஜங்கிள்ராஜ் ஆட்சிக்கு முடிவுகட்டுவேன் என்று கூறியே நிதீஷ் குமார் வெற்றி பெற்றார். ஆனால், லாலுவின் வழியிலேயே நிதீஷ் குமாரும் ஆட்சிசெய்து வருகிறார்
நாங்கள் ஏழைமக்களுக்கான அரசை கட்டியெழுப்ப விரும்புகிறோம். ஏழைமக்களுக்கு கடன்கள் அளிக்க விரும்புகிறோம், இதனால் அவர்கள் வளர்ச்சிக்கு இந்தக்கடன் தொகையை பயன்படுத்திக் கொள்வர்."
லல்லு பிரசாத் யாதவின் சொந்த மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க.வின் உச்சகட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது,
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.