மாநிலங்களவை என்பது தரமான, ஆக்கப் பூர்வமான விவாதங்கள் நடை பெறும் அவையாகும். ஆனால், சில எம்.பி.க்களின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது. இதனால், ஒட்டு மொத்த நாடும் வேதனைஅடைகிறது.
பாஜக மீது நீங்கள் சேற்றைவாரி இறைக்க இறைக்க தாமரைகள் மலர்ந்துகொண்டே இருக்கும். தாமரை மலர்வதற்கு நீங்கள் (எதிர்க்கட்சிகள்) அளிக்கும் மறைமுக ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி.
கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு நாட்டின்வளர்ச்சிக்கு அஸ்திவாரம் அமைத்த தாகவும், அதன் பலனை இப்போது நாங்கள் அறுவடை செய்வ தாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே கூறினார்.
2014-ல் நான் பிரதமராக பதவியேற்றேன். எனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களையும், காங்கிரஸ் ஆட்சியில் 60 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மைதெரியும். காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.
2014-க்கு முன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வங்கிக் கணக்குகிடையாது. பாஜக ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் 48 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குடி நீர் இணைப்பு வழங்கப்பட்டது. பாஜக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 11 கோடி வீடுகளுக்கு குடி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 11 கோடி கழிப் பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 25 கோடி குடும்பங்களுக்கு சமையல்காஸ் இணைப்பு வழங்கப் பட்டிருக்கிறது.
2014-ம் ஆண்டுக்கு முந்தைய பட்ஜெட்டை விட, தற்போது கல்வி, உட்கட்டமைப்புகளுக்கு 5 மடங்கு அதிகநிதி ஒதுக்கப் படுகிறது.
லஞ்சம், ஊழல் இல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் சென்றடைவதே உண்மையான மதச்சார்பின்மை. அந்தவகையில், நாங்கள் உண்மையான மதச் சார்பின்மையைப் பின்பற்றி வருகிறோம்.
அண்டை நாடுகள் தவறானப் பொருளாதாரப் பாதையை தேர்ந்தெடுத்ததால், கடும்நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் சிலமாநில அரசுகள் உடனடி பலன்களுக்காக அதிக கடன்வாங்கி வருகின்றன. இது மாநிலத்தை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும். எனவே, மாநிலஅரசுகள் தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட வேண்டுகிறேன்.
காங்கிரஸ் ஆட்சியில் 600-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நேரு மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் சூட்டப்பட்டன. ஆனால், நேருவின் வாரிசுகள் அவரது பெயரை தங்கள்பெயரோடு சேர்க்கவில்லை. நமது நாடு ஒரு குடும்பத்தின் (நேரு) சொத்து கிடையாது. இது மக்களின் சொத்து.
மக்கள் தொடர்ந்து புறக்கணித்த போதும் காங்கிரஸ் மாறவில்லை. தொடர்ந்து சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களது நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கண் காணித்து, தக்க தண்டனை வழங்கி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப் பட்டன. 356-வது பிரிவை பயன்படுத்தி, பல்வேறு மாநிலஅரசுகள் கலைக்கப் பட்டன. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, 50 முறை 356-வது பிரிவைப் பயன்படுத் தினார்.
அவையில் இருக்கும் திமுக நண்பர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியைக் கலைத்தது யார்? அப்போதைய காங்கிரஸ் அரசு என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள். எம்ஜிஆர் ஆட்சியையும் காங்கிரஸ் அரசேகலைத்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.
அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அனைத்து மாநிலங்களின் ஆளுநர் மாளிகைகள் கட்சி அலுவலங்களாகச் செயல்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். பாஜக மீது சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரைகள் மலரும்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் பதில் அளித்து பேசியது.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |