தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய குழந்தைகளில் யாருக்கு வேண்டுமானாலும் நீரிழிவுநோய் வர வாய்ப்புண்டு. ஆண்குழந்தை அல்லது பெண் குழந்தை – இவர்களில் யாருக்கும் வரலாம். எந்த வயதில் வரும் என்று குறிப்பாகச் சொல்ல முடியாது. சாதாரணமாக 25 முதல் 40 வயதுகளில் நீரிழிவுநோயின் அறிகுறிகள் தெரியலாம்.
அதிக உடல் பருமனுடன் அதாவது குண்டாக இருப்பவர்களுக்கு நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை அதிகம் உண்பவர்களுக்கு நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள் மற்றும் உட்கார்ந்த இடத்திலேயே பணிசெய்கிற சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு (வங்கிப்பணியாளர்கள், அடகுகடை வைத்துள்ளவர்கள் போன்றோர்) நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
அடிக்கடி கருவுறும் பெண்களுக்கு நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
பல்வேறு நோய்களால் தாக்கப்படுவோருக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
மன அழுத்தம், மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆண் பெண், அதிக உணர்ச்சிவயப்படுவோர் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
அதிக அளவு உணவு உட்கொள்ளுவோருக்கு நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக 40 வயதைக் கடந்த ஆண், பெண் எவருக்கும் நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.