திமுக தலைவர் கருணா நிதியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென திங்கள்கிழமை சந்தித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணா நிதியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது பொன்.ராதாகிருஷ்ணன் தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை கருணாநிதிக்கு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது: கருணாநிதியுடனான சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது. என் அண்ணன் மகன் திருமண அழைப் பிதழைக் கொடுத்தேன்.
இலங்கை ராணுவத்தால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மனிதாபிமான முறையில் பிரச்னைக்கு தீர்வுகாண பிரதமர் மோடியும் தீவிரமுயற்சி எடுத்து வருகிறார்.
தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிக்க சென்றால் கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதாக அந்தநாடு கூறியுள்ளது. இது எந்தநாட்டிலும் இல்லாத சட்டம். அப்படி பார்த்தால் எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்களிடம் இருந்து நாம் ரூ.75 கோடி வசூலிக்க வேண்டி வரும்.
மீனவர்கள் பிரச்னை முடிவுக்கு வர மீனவர்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்றார். பொன்.ராதா கிருஷ்ணனுடன் பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜூலுவும் உடன் சென்றார்.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.