பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் பள்ளியில், படிப்பில் கவனம் செலுத்த முடியும். விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றிலும் உற்சாகமாக ஈடுபடமுடியும். இந்தியா மற்றும் வளரும் நாடுகள் பலவற்றிலும் செய்த ஆராய்ச்சியில் பள்ளிக்குச் செல்லும் பெரும்பாலான குழந்தைகள் போதுமான உணவை எடுப்பதில்லை. அல்லது அவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.
குறைந்த செலவில்… தருகின்ற உணவில் பாலும், விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவான இறைச்சி, முட்டை முதலியவையும், பருப்பு வகைகள், வேர்க்கடலை மற்றும் ராகி ஆகியவற்றையும் தர வேண்டும்.
குழந்தைகளுக்கு போதுமான உணவுச் சத்துக்கள் கிடைக்க… பள்ளியிலேயே அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் முறை பல்வேறு மேலை நாடுகளிலும், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் கொண்டு வரப்பட்டன. இந்தியாவிலும் கூட இந்த முறையைக் கையாள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கூடப் பல்வேறு சத்துணவுக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டு…. சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
'பள்ளி சுகாதார அமைப்பு' என்ற அமைப்பு அரசாங்கத்தால் நிறுவப்பட்டு இந்தமைப்பு ஆராய்ச்சி அரசாங்கத்தால் நிறுவப்பட்டு இந்த அமைப்பு ஆராய்ச்சி செய்து… பள்ளிக்கு வருகின்ற மாணவர்களுக்குத் தினமும் அவர்களுக்கு எந்தெந்த சத்துக்கள் எந்தெந்த அளவில் தேவைப்படும் என்பதைத் தெரிவித்துள்ளார்கள். இதில் பருப்பு வகையினால் கிடைக்கும் புரோட்டீனுக்குப் பதிலாக சீன் 15 கி. அல்லது பதப்படுத்தப்பட்ட பால் 120 மிலி அல்லது பல்வேறு கலப்பட உணவு 15 கிராம் ஆகியவற்றைத் தரலாமென்றும் இந்த அமைப்பு அரசுக்குச் சிபாரிசு செய்துள்ளது.
பல்வேறு பால் மற்றும் விலங்குகளிடமிருந்து கிடைக்கும் புரோட்டீன் உணவுப் பற்றாக்குறைவினால் எல்லோருக்கும் இந்த உணவை அளிக்க முடியாத காரணத்தால் பல்வேறு உள்ளூரில் கிடைக்கும் உணவுகளிலேயே சத்தான அதே சமயம் மலிவாகக் கிடைக்கும் உணவுகளிலேயே சாத்தான அதே சமயம் மலிவாகக் கிடைக்கும் பல்வறு உணவுடன் உணவுச் சத்துக்களும் சேர்க்கப்பட்டு, அதன் மூலமே குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த வகையில் சத்தான எண்ணெய் வித்துக்களுடன், கடலை மாவுடன், வைட்டமின்களும், தாது உப்புகளும் சேர்க்கப்பட்டு குழந்தைகளுக்கு உணவு தரப்படுகிறது.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
You must be logged in to post a comment.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
1baiting