எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது நல்லது. சுருக்கமாகச் சொன்னால் சாப்பாட்டில் காரசாரம் இருக்கலாம், ஆனால் பேச்சில் காரசாரம் இருக்கக் கூடாது. நம்மில் நிறையப் பேர் செய்யும் மற்றெhரு தவறு, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொணடே சாப்பிடுவது. பல
நேரங்களில் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாது. சில நேரங்களில் நம்முடைய தட்டில் உள்ளதைச் சாப்பிடுகிறோமா, அடுத்தவருடைய தட்டில் இருப்பதை எடுத்துச் சாப்பிடுகிறோமா என்பதும் தெரியாது. அந்த அளவுக்குத் தொலைக்காட்சியில் தங்களைத் தொலைத்து கொள்வோரும் உண்டு.
அதே நேரத்தில் ருசிக்காகச் சாப்பிடுகிறோமா, ருசித்துச் சாப்பிடுகிறோமா என்பதையும் நாம் சிந்திக்கலாம். ருசியால் கேடில்லை என்றால் சரி. ஆனால் அந்த ருசியால் கேடு ஏற்படும் என்றால் அத்தகைய உணவுப் பதார்த்தத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ருசித்துச் சாப்பிடுவது என்பது, உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு உணவைக் கடித்து மென்று அனுபவித்துச் சாப்பிடுவது.
– அண்ணல் மகாத்மா காந்தியடிகள்
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்துமாறு உடலை வருத்தி உழைக்க பலருக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். குறைந்த பட்சம் தினமும் அவரவர்களால் இயன்ற வீட்டு வேலைகளைச் செய்த பின் சாப்பிட்டால், " உழைத்துச் சாப்பிட்டதாக" எடுத்துக் கொள்ளலாமே. அதற்கும் வாய்ப்பில்லை என்றால் உடற் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் முக்கியம்.
ஆகவே என்ன சாப்பிடுகிறோம் , எங்கு சாப்பிடுகிறோம் என்ற கேள்விகளுடன் எதற்காகச் சாப்பிடுகிறோம் என்பதையும் யோசித்து, பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால், உடல் நலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அது பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
You must be logged in to post a comment.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
3indeterminate