பிரதமர் நரேந்திரமோடி, ஒரு நாள் பயணமாக, வருகிற 7-ந்தேதி காஷ்மீர் செல்கிறார். ஜம்மு பிராந்தியம் ரம்பன் மாவட்டம் சந்தர் கோட் பகுதியில், பக்லிகர் மின் திட்டம், உத்தம்பூர்-பானிஹல் இடையிலான நான்கு வழிசாலை திட்டம் ஆகியவற்றை அவர் தொடங்கி வைக்கிறார்.
தலைநகர் ஸ்ரீநகரில் ஷெர்-இகாஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
பிரதமரின் பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக, அதேநாளில், ஸ்ரீநகரில் 10 லட்சம்பேர் பங்கேற்கும் பேரணிக்கு பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டுகட்சி தலைவர் சையது அலிஷா ஜிலானி அழைப்பு விடுத்துள்ளார். அவர் ஏற்கனவே வீட்டுக் காவலில் உள்ளார்.
இதையடுத்து, பிரதமரின் பொதுக்கூட்டம் அமைதியாக நடைபெற ஏதுவாக, கலகக்கார தலைவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லை பாதுகாப்புபடையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பிரதமர்வருகை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜம்முவில் மாநில போலீஸ் டிஜிபி. கே.ராஜேந்திர குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமரின் வாகன அணி வகுப்பு செல்லும் பாதை, போக்குவரத்து மாற்றம், குடிநீர், வாகன நிறுத்தம், முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் உள்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப் பட்டது.
பாதுகாப்பு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு நிலவவேண்டும் என்றும், சமூக விரோத சக்திகளை கண்காணிக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் டி.ஜி.பி. வலியுறுத்தினார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.