இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப் படுகிறது. சுமார் ஒரு அடி உயரம்வரை வளரும் தன்மை உடையது.
தொன்று தொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு இந்த மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச்சொல்லிலும், பயன் படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
கீழாநெல்லி இலையை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு விழுதை ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். ஆனால், மூன்று நாட்களிலும் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்து வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்
பாம்பு கடி விஷம் நீங்க கீழா நெல்லியில் 1௦ கிராம் எடுத்து, 5 கிராம் மிளகு சேர்த்து மைபோல அரைத்து, நெல்லிக்காயளவு விழுதை வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் கொடுத்துவிட வேண்டும். அன்று உப்பில்லாமல் பத்தியம் வைத்திருக்க வேண்டும்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.