ஜம்மு-காஷ்மீர் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை

ஸ்ரீநகரின் ஷேர்-இகாஷ்மீர் சர்வதேசமாநாட்டு மையத்தில் (SKICC) நேற்று நடைபெற்ற, இளைஞர்களுக்கு திறனூட்டுவது தொடர்பான நிகழ்ச்சிநடைபெற்றது. மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபின், நரேந்திரமோடி ஜம்மு-காஷ்மீரில் முதல்முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் மாநில அந்தஸ்து தொடர்பாக வாக்குறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடி, “சட்ட சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. உங்கள் வாக்குமூலம் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஜம்மு-காஷ்மீர் ஒருமாநிலமாக அதன் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்ளூர்ளவில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் மூலம் பிரச்சினைகளைத்தீர்க்க வழிகளைக் காண்கிறீர்கள். இதைவிடசிறந்தது என்ன? எனவே, இப்போது சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தங்களும் தொடங்கியுள்ளன. காலம் வெகுதொலைவில் இல்லை. உங்கள் வாக்குகள் மூலம் ஜம்முகாஷ்மீரின் புதிய அரசை தேர்வுசெய்வீர்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்படும் மாற்றங்களை உலகம் முழுவதும் கண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் கடந்த 2019ம் ஆண்டில் இரண்டுயூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் சிறப்பு அந்தஸ்தும் ரத்துசெய்யப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் வாக்குறுதியளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக சட்ட சபை தேர்தல் நடந்த நிலையில், அப்பகுதி மக்கள் புதிய தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர்.

இந்த சூழலில்தான் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்புவது என்பது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியின்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப் படும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இருப்பினும் அரசாங்கத்தால் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப் படவில்லை. இதனிடையே, உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஜம்மு & காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன் விளைவாகவே தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அங்கு மாநில அந்தஸ்தும் மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடிகள் – மோடி பேச்சு 'டிஜிட்டல்' மோசடிகள், 'சைபர்' குற்றங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பங்களால் அரங்கேறும், ...

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் ​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரல ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் -ஜிதேந்திர சிங் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் பொறுப்பு வாங்க தேசத்துக்கு உள்ளது – ஜெய் சங்கர் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.